27ம் தேதி இந்தியா வருகிறார் ரணில்
கொழும்பு:
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு இந்தியாவில்பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பரில் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று,பிரதமராகப் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே இந்தியா சென்ற ரணில், பிரதமர் வாஜ்பாய்உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தற்போது நடந்து வரும்அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் இந்தியாவுக்கு உடனுக்குடன் தகவல் அளித்து வருகிறார்ரணில்.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் முழுமையாக ஆதரித்துள்ளது. ஆனாலும்புலிகள் மீதான தடையை இன்னும் இந்தியா விலக்கிக் கொள்ளவில்லை.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு ஆண்டுநிறைவடைந்துள்ள நிலையில் வரும் 27ம் தேதி இந்தியாவுக்குச் செல்கிறார் ரணில்.
பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாஉள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார் ரணில்.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர்இந்தியத் தலைவர்களிடம் விளக்கிக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்குச் செல்லும் ரணில் மார்ச் 2ம் தேதி இலங்கைக்குத்திரும்புகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications