பெண் ஊழியருக்கு "செக்ஸ்" மிரட்டல்: மதுரை வானொலி நிலைய அதிகாரி கைது
மதுரை:
தற்காலிக பெண் ஊழியரை மிரட்டி செக்ஸுக்கு வற்புறுத்தியதாக மதுரை வானொலி நிலையஅதிகாரி ஒருவரைப் பெண் போலீசார் கைது செய்தனர்.
மதுரை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து வருபவர் கோபால்.
இதே வானொலி நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல், டப்பிங் குரல்கொடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 15 பேர் தற்காலிக ஊழியர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தான்.
இந்தத் தற்காலிக ஊழியர்களுக்கு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரூ.200 அல்லது ரூ.300 வீதம் "செக்"காகவழங்கப்படும்.
கோபால் இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சில பெண் ஊழியர்களைத் தன்ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். நான் கூறுவது போல் நடந்து கொண்டால் நிறையநிகழ்ச்சிகள் தருவேன் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார் அவர். இதன் காரணமாக சில பெண்கள்அந்த வேலையே விட்டே நின்று விட்டனர்.
இந்நிலையில் ஏற்கனவே திருமணமான அனுராதா என்ற தற்காலிகப் பெண் ஊழியரிடமும் தன்கைவரிசையைக் காட்டியுள்ளார் கோபால். வானொலி நிலையத்திற்குள்ளேயே ஒலிபரப்புஅரங்குகளில் வைத்து சேலையைப் பிடித்து இழுப்பது, சுடிதாரின் துப்பட்டாவைப் பிடித்து இழுப்பதுஎன்று சில்மிஷம் செய்து வந்தாராம்.
மேலும் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறும் அனுராதாவை மிரட்டியுள்ளார் கோபால்.இதையடுத்து தல்லாகுளத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அனுராதா புகார்கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து பெண் போலீசார் மாறு வேடத்தில் கோபாலைக் கண்காணிக்கத் தொடங்கினர்.மேலும் "உங்கள் விருப்பப்படி நான் நடந்து கொள்கிறேன்" என்று கூறி கோபாலிடம் நடித்தார்அனுராதா.
கோபாலும் உடனே வாயெல்லாம் பல்லாக, தன் வீட்டில் யாரும் இல்லை என்று கூறி அனுராதாவைஅங்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
வீட்டின் அருகே சென்றதும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த போலீசார் கோபாலை சுற்றிவளைத்துக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார்கோபாலை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கோபால் மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
செக்ஸ் புகார் தொடர்பாக வானொலி நிலைய அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications