இறங்கி வருகிறகு ஈராக்.. முரண்டு பிடிக்கிறது அமெரிக்கா
பாக்தாத்:
ஐ.நாவின் ஆயுதப் பார்வையாளர்களின் உத்தரவுப்படி தன்னிடம் உள்ள 200 கி.மீ. தூரம் பாயும் ஏவுகணைகளைஅழிக்க ஈராக் முன்வந்துள்ளது. அதே நேரத்தில் ஈராக்கைத் தாக்க அனுமதி கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வரும் மும்முரத்தில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
ஈராக்கிடம் மனித குலத்துக்கு எதிரான அபாயகரமான அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் இல்லை என்றுகூறிவிட்ட ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹேன்ஸ் பிலிக்ஸ், அதே நேரத்தில் அல்-சமத் ரகஏவுகணைகளை அழிக்க வேண்டும் என்று ஈராக்குக்கு உத்தரவிட்டார்.
அந்த அழிப்புப் பணியை மார்ச் 1ம் தேதிக்குள் தொடங்குமாறு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த உத்தரவைஏற்பது குறித்து யோசித்து வருவதாக ஈராக் அறிவித்துள்ளது.
இந் நிலையில் ஈராக்கைத் தாக்க அனுமதி கோரி இரண்டாவது தீர்மானத்தைக் கொண்டு வரவும் இந்தத்தீர்மானத்துக்கு பிற நாடுகளின் ஆதரவைப் பெறவும் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்காகொண்டு வந்த முதல் தீர்மானம் ஏற்கப்படவில்லை.
இரண்டாவது தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ரத்து செய்ய வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் எனபிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை அறிவித்துள்ளன. இதையடுத்து சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட ஆசியநாடுகளின் ஆதரவைத் திரட்டு வேலையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார்.மேலும் பல நாடுகளுக்கும் அவர் பயணம் செய்ய உள்ளார்.
சீனா பிடிவாதம்:
ஆனால், சீனா தனது நிலையை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டது. ஈராக்கைத் தாக்கும் அமெரிக்கத் திட்டத்துக்குஆதரவு தர முடியாது என காலின் பாவலிடம் சீனா தெரிவித்துவிட்டது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் மொத்தம் 15 நாடுகள் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 9 நாடுகளின் ஆதரவுகிடைத்தால் தான் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். மேலும் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களானரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டனுக்கு வீடோ அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தினால் தீர்மானத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய முடியும். பிரான்ஸ் அதைச்செய்யும் என்று தெரிகிறது.
தீர்மானம் நிறைவேறாவிட்டாலும் ஈராக்கைத் தாக்குவோம் என அமெரிக்கா கூறிக் கொண்டிருப்பது உலகநாடுகளை எரிச்சலாக்கியுள்ளது.
இந் நிலையில் அரபு நாடுகளின் கூட்டம் எகிப்தில் கூட உள்ளது. அதில் ஈராக் தாக்குதலுக்கு எதிராக அனைத்துஅரபு நாடுகளும் சேர்ந்து தீர்மானம் போடும் என்று தெரிகிறது.
அமெரிக்காவின் இரட்டை வேடம்:
இதற்கிடையே தனது ஆயுதக் கிடங்கைப் பார்வையிட வந்த சர்வதேசக் குழுவினரை அமெரிக்கா திருப்பிஅனுப்பியுள்ளது.
மேரிலாண்ட் மாகாணத்தில் எட்ஜ்உட் என்ற மக்கள் வசிக்கும் பகுதியில் அமெரிக்கா தனது ரசாயன, உயிரியல்ஆயுதக் கிடங்கை வைத்துள்ளது. இதற்கு பல அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன
இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 13 பேர் குழு இந்த ஆயுதக் கிடங்கை பார்வையிடச் சென்றது. ஆனால், உரியஅனுமதி இல்லாமல் வந்ததாகக் கூறி அவர்களை உள்ளே விட அமெரிக்க ராணுவ அதிகாரிகள்அனுமதிக்கவில்லை.
இதையே ஈராக் செய்திருந்தால் உடனே அந் நாடு மீது அமெரிக்கா போர் தொடுத்திருக்கும். ஆனால்,அமெரிக்காவின் இச் செயலை யார் தட்டிக் கேட்பது என பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் எம்.பியும் இந்தக்குழுவில் இடம் பெற்றுள்ளவருமான அலன் சிம்ப் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications