அத்வானியை விசாரிக்க அனுமதி கோருகிறது சி.பி.ஐ.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் துணைப் பிரதமர் அத்வானி மற்றும் அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிஆகியோரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்திடம் சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ராய்பரேலி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகளை அடக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் கிளம்பியது. அத்வானி மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளசி.பி.ஐயை அடக்கும் வேலைகள் நடந்து வருவதால் முதலில் அத்வானி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ்மற்றும் எதிர்க் கட்சிகள் கோரின.

மக்களவையில் காங்கிரஸ் கொறடா பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி பேசுகையில், அத்வானியும் ஜோஷியும் பதவியில்இருக்கும் வரை சி.பி.ஐ. இந்த விஷயத்தில் சுந்திரமாக செயல்பட முடியாது. எனவே, இருவரும் பதவி விலகிவிட்டுநியாயமான சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது அவையில் இருந்த அத்வானி பதில் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

அப்போது பேசிய சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், 4 மாதங்களுக்கு முன்பே இந்த மனுவைத்தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி தந்தது. ஆனால், இத்தனை நாட்கள் சி.பி.ஐ. ஏன் அமைதியாகஇருந்தது?. சி.ஐ.ஐயை செயல்பட விடாமல் மத்திய அரசும் அத்வானியும் தடுத்தது தான் காரணம். நீதிமன்றத்தில்இந்த விவகாரத்தை மேலும் தாமதிக்க முடியாது என்பதால் இப்போது வேறு வழி இல்லாமல் சி.பி.ஐ. மனு தாக்கல்செய்துள்ளது.

ஆனால், இனிமேல் தான் உண்மையிலேயே சி.பி.ஐயின் செயல்பாட்டை அத்வானி முடக்கப் போகிறார் என்றார்.

சி.பி.ஐயின் செயல்பாட்டிலோ, நீதித்துறையின் செயல்பாட்டிலோ மத்திய அரசு தலையிடாது என சட்ட அமைச்சர்அருண் ஜேட்லி பதில் அளித்தார்.

அமைச்சரின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி சோனி காந்தி தலைமையில் அனைத்து எதிர்க் கட்சிஎம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

காங். ஆதரித்தால் அயோத்திக்கு தீர்வு:

முன்னதாக காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்தால் சட்டத் திருத்தம் மூலம் அயோத்திப் பிரச்சனைக்குத் தீர்வு காணத்தயாராக இருப்பதாக அத்வானி கூறியுள்ளார்.

பா.ஜ.க. எம்.பிக்கள் கூட்டத்தில் இன்று காலை பேசிய அவர்,

காங்கிரஸ் ஆதரவு தந்தால் எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி சட்டத் திருத்தம் கொண்டு வந்து அயோத்திபிரச்னையைத் தீர்க்க முடியும். அயோத்தி விவகாரத்தை ஓட்டுக்காகத் தான் காங்கிரஸ் கிளப்புகிறது. பசுவைக்கொல்வதைத் தடுக்கும் விஷயத்தில் காங்கிரசின் நிலை என்ன?

நாங்கள் இறைச்சிக்காக பசுக்களைக் கொல்வதை எதிர்க்கிறோம். அதே ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்றும்விரும்புகிறோம். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பதால்அமைதி காக்கிறோம் என்றார்.

சட்டத் திருத்தம் மூலம் அயோத்தி பிரச்சனைக்குத் தீர்வு என்று அத்வானி கூறுவது, சர்சைக்குரிய இடத்தைவி.எச்.பியிடம் தருவதைத் தான் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

நிலத்தை முஸ்லீம்கள் தர வேண்டும்:

இதற்கிடையே அயோத்தியில் உள்ள பிரச்சனைக்குரிய இடத்தை முஸ்லீம்கள் தாங்களாகவே முன்வந்து விஸ்வஹிந்து பரிஷத்திடம் கோவில் கட்ட பரிசாகத் தர வேண்டும் என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் கூறுகையில், கோவில் கட்டுவதில் பா.ஜ.க. உறுதியாகஉள்ளது. நாட்டின் ஒற்றுமையை மனதில் வைத்து இந்த நிலத்தை முஸ்லீம்கள் தந்துவிட வேண்டும் என்றார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+