விதி மீறல்: ஜெயலலிதாவுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டனம்
டெல்லி & சென்னை:
சாத்தான்குளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதிகள் அளித்து பிரச்சாரம் செய்ததற்குதேர்தல் கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் சிமெண்ட் ஆலை, பெண்கள் கல்லூரி, பாலிடெக்னிக், விளையாட்டு மைதானம்ஆகியவை அமைக்கப்படும் என்று பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா நேரடியாகவேஉறுதியளித்தார்.
இது தொடர்பாக நேற்று விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் கமிஷன் நோட்டீஸ்அனுப்பியது. உடனே தமிழக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேஷ் பதில் கடிதமும் அனுப்பினார்.அதில் ஜெயலலிதா வாக்குறுதி தரவில்லை என்றும், சாத்தான்குளத்துக்கு உதவுவது குறித்துபரிசீலிப்பேன் என்று தான் குறிப்பிட்டார் எனவும் கூறியிருந்தார்.
ஆனால், தலைமைச் செயலாளரின் இந்த வாதத்தை ஏற்க தலைமைத் தேர்தல் கமிஷன்மறுத்துவிட்டது. சிமெண்ட் ஆலை, பெண்கள் கல்லூரி, பாலிடெக்னிக், விளையாட்டு மைதானம்அமைப்பேன் என்று ஜெயலலிதா பேசியது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என கமிஷன்கூறியுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனுப்பிய பதில் குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இன்றுவிவாதித்தனர். ஜெயலலிதா செய்தது தவறு என்று அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்விளக்கமும் கமிஷனால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
வாக்காளர்களுக்கு உறுதிமொழிகளைத் தந்துவிட்டு, இப்பேது உறுதிமொழி தருவது குறித்து யோசிக்கிறேன் என்றுதான் ஜெயலலிதா பேசியதாக தலைமைச் செயலாளர் கூறுவது அப்பட்டமான மழுப்பல். முதல்வர் பதவியில்இருக்கும் ஒரு நபர் செய்யும் வேலையல்ல இது. தனது பதவியை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டுவிதிகளை திட்டமிட்டே மீறியிருக்கிறார் ஜெயலலிதா என்று தேர்தல் கமிஷன் காட்டமாக கூறியுள்ளது.
முன்னதாக நேற்றிரவு தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்அனுப்பியது. அதில்,"ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு உறுதிமொழிகளைவழங்கியது தொடர்பாக பத்திரிக்கைகள், டி.வி. மற்றும் பிற தகவல்தொடர்பு சாதனங்கள் மூலம்தேர்தல் கமிஷனுக்குத் தெரிய வந்துள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் சாத்தான்குளம் தொகுதியில் பெண்கள் கல்லூரி, பாலிடெக்னிக், விளையாட்டுவளாகம் மற்றும் சிமெண்ட் ஆலை ஆகியவற்றை அமைத்துத் தருவதாக ஜெயலலிதாவாக்குறுதிகளை அளித்துள்ளார்.
வரும் 26ம் தேதி (நாளை) தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சாத்தான்குளம் தொகுதியை உள்ளடக்கியதூத்துக்குடி மாவட்டம் முழுவதுமே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இந்நிலையில் இதுபோன்ற வாக்குறுதிகளை முதல்வர் உண்மையிலேயே அளித்தாரா என்பதுதொடர்பாக உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும்" என்று அந்த நோட்டீஸில் தேர்தல் கமிஷன்கூறியது.
"விதிமுறை மீறல் இல்லை":
இதையடுத்து இரவோடு இரவாக லட்சுமி பிரானேஷ் மூலம் தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதாஅனுப்பிய அவசர பதில் கடித விவரம்:
சாத்தான்குளத்தில் சிமெண்ட் ஆலை, பாலிடெக்னிக், விளையாட்டு மைதானம், பெண்கள் கல்லூரிஆகியவை உடனடியாக அமைக்கப்படும் என்று உறுதியான வாக்குறுதி எதையும் ஜெயலலிதாஅளிக்கவில்லை.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுமாறு சாத்தான்குளம் தொகுதி மக்கள் பலஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அவற்றை நிறைவேற்றுவது குறித்துதேர்தலுக்குப் பின்னர் தமிழக அரசு ஆராயும் என்றுதான் ஜெயலலிதா பேசியுள்ளார்.
இது குறித்து பத்திரிக்கைகள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன. எனவே இதில் தேர்தல்விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று லட்சுமி பிரானேஷ் கூறியிருந்தார்.
ஆனால், இந்த வாதத்தை ஏற்க தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications