கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா நூல் பரபரப்பான விற்பனை
சென்னை:
தொல்காப்பியப் பூங்கா நூல் வெளியீட்டில் கிடைத்த தொகையில் ரூ. 10 லட்சத்தை திமுக அறக்கட்டளைக்குகருணாநிதி வழங்கியுள்ளார்.
சமீபத்தில் கோவாவில் இரு வாரங்கள் தங்கியிருந்து இந்த நூலை கருணாநிதி எழுதினார். தொல்காப்பியத்தில்உள்ள மிகக் கடினமான கவிதைகளை எளிமைப்படுத்தி இந்த நூலை அவர் எழுதியுள்ளார்.
இந்த நூலின் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. விழா மண்டபத்திலேயே நடந்த விற்பனையில் ரூ. 29 லட்சம்வசூலானது. இதில் ரூ. 10 லட்சத்தை திமுக அறக்கட்டளைக்கு வழங்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த ரூ. 10 லட்சம் நிதி திமுக கவுன்சிலர்களின் தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்விஉதவிக்காகவும், திமுகவினருக்கு மருத்துவ உதவி செய்யவும் பயன்படுத்தப்படும்.
இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு முதல் நாளே விற்றுத் தீர்ந்துவிட்டது. இரண்டாம் பதிப்பும் நானே எதிர்பார்க்காதவேகத்தில் விற்று வருகிறது. இதனால் விரைவில் மூன்றாம், நான்காம் பதிப்புகளையும் வெளியிடதிட்டமிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications