கல்லூரி விடுதி அறையில் தூக்கில் தொங்கிய மாணவி
திருநெல்வேலி:
ஆலங்குளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்த காயத்ரி என்ற மாணவி கல்லூரிவிடுதியிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போளூரைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரின் மகள் இவர். பி.இ. கம்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாணடுமாணவியான இவரும் அதே கல்லூரியில் படித்த ஜெயராம் என்ற மாணவரும் காதலித்து வந்தனர்.
நேற்று காலை இருவரும் கல்லூரி வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த முதல்வர் இருவரையும்அழைத்து கண்டித்து வகுப்புகளுக்குச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
இதையடுத்து ஜெயராம் வகுப்புக்கு வந்துவிட்டார். ஆனால், காயத்ரி தனது விடுதி அறைக்குச் சென்றார்.வகுப்புக்கு வரவில்லை. அறைக் கதவும் மாலை வரை உள்பக்கமாக பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த வார்டனும்பிற மாணவிகளும் ஜன்னல் வழியே பார்த்தபோது காயத்ரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இவரது காதலில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதையடுத்துத் தான் காயத்ரி இந்த முடிவுக்கு வந்ததாகவும்கூறப்படுகிறது. அவரது அறையில் இரு வகையான கடிதங்கள் இருந்தன. முதல் கடிதத்தில் என்னை மன்னித்துவிடு,என்னை மறந்துவிடாதே என்று எழுத்தப்பட்டிருந்தது. இரண்டாவது கடிதத்தில் என்னை மறந்துவிடு, ஒழுங்காக படிஎன்றும் எழுதப்பட்டிருந்தது.
இச் சம்பவம் கல்லூரி மாணவிகள் இடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications