கள்ள ஓட்டு போட வந்த அதிமுகவினர்- பொது மக்கள் கைகலப்பு
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் கள்ள ஓட்டு போட வந்த அதிமுகவினரின் காரை பொது மக்களே தடுத்து நிறுத்தி உடைத்தனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளத்தில் கள்ள ஓட்டுப் போட சென்னை ஆலந்தூரில் இருந்து நூற்றுக்கணக்கான அதிமுகவினரை சமூக நலத்துறை அமைச்சர்வளர்மதி அழைத்து வந்திருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அவரையும் அதிமுகவினரையும் உடனே வெளியேற்றக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் இருந்து 3 பேர் ஒரு காரில் சாத்தான்குளத்துக்குள் வந்தனர். அந்தக் காரை களிம்புவிளைஎன்ற இடத்தில் பொது மக்கள் தடுத்து நிறுத்தினர். உள்ளே இருந்த அதிமுகவினருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அந்தக் காரை மக்கள் தாக்கியதில் அது பலத்த சேதமடைந்தது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உடைந்தகண்ணாடிகளுடன் நின்ற அந்தக் காரையும் அதில் இருந்தவர்களையும் திருப்பி நெல்லைக்கே அனுப்பினர்.
சுன்டன்கோட்டையில் கள்ள வாக்குப் போட முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தட்டாமடத்தில் தேர்தல் அதிகாரி உதவியுடன் கள்ள ஓட்டுப் போடப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் வாக்குப் பதிவு குறித்த செய்திகளைச் சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை தராமல்இழுத்தடித்தார் அதிகாரி அப்பாகுட்டி. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்திய பின்னரேஅடையாள அட்டைகள் தரப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி, உள்ளூர் மக்களின் தீவிர கண்காணிப்பால் கள்ள ஓட்டுக்கள் பெருமளவில்கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications