ராமதாஸ் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு கொலை மிரட்டல்
மயிலாடுதுறை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கை விசாரித்து வரும்மயிலாடுதுறை நீதித் துறை நடுவர் ராஜ்குமாருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
வேதாகமப் பள்ளிகளைக் குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று கூறியதற்காக டாக்டர் ராமதாஸ் மீதுமயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி ராஜ்குமார்விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி நீதிபதி ராஜ்குமாருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில்,
டாக்டர் ராமதாஸை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள்விபரீதமாக இருக்கும். இப்படிக்கு, தட்சிணாமூர்த்தி, தொலைத் தொடர்புத் துறை, மயிலாடுதுறைஎன்று எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கொலை மிரட்டல் கடிதம் குறித்து மயிலாடுதுறை போலீஸில் நீதிபதி ராஜ்குமார் புகார்செய்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி இந்தக் கடிதத்தைஎழுதியவனைத் தேடி வருகிறார்கள்.
-வழக்கு ஒத்திவைப்பு:
இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கின் விசாரணை மார்ச் 11ம் தேதிஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராகாமல் ராமதாஸ் தவிர்த்து வந்தார். இதைத் தொடர்ந்துஅவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துகைதாவதிலிருந்து தப்பித்தார் ராமதாஸ்.
இதன் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜரானார் ராமதாஸ்.தொடர்ந்து வழக்கு விசாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ராஜசேகரன் மற்றும் நாராயணசாமி ஆகிய இருவரும்ஆஜராகினர்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால் அதுவரை இங்குவிசாரணை நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி அப்போது அவர்கள் ஒரு மனுவைத்தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜ்குமார் இவ்வழக்கு விசாரணையை மார்ச் 11ம் தேதிக்குஒத்திவைத்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications