பிறந்தநாள் கொண்டாட மாட்டேன்: கருணாநிதி,ஜெயா வழியில் ஸ்டாலின்
சென்னை:
தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக தனது பிறந்தநாளை திமுகவினர் யாரும் கொண்டாடவேண்டாம் என்று திமுக இளைஞர் அணிச் செயலாளரான மு.க. ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளின் பட்டினி ஆகியவை காரணமாக தனது பிறந்தநாளைக்கொண்டாடவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அவரது வழியில் நானும் எனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முடிவுசெய்துள்ளேன்.
அதேபோல தொண்டர்களும் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். மேலும் அன்றையதினம் நான் சென்னையில் இருக்க மாட்டேன். எனவே என்னைப் பார்ப்பதற்காக யாரும்சென்னைக்கும் வர வேண்டாம் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஸ்டாலின்.
ஆனாலும் மதுரையில் அழகிரி கோஷ்டியினரைத் தூண்டும் விதத்தில் தன் பிறந்தநாளை"கிராண்டாகக்" கொண்டாடுமாறு ஸ்டாலின் தன் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சமீபத்தில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடவேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications