டெல்லியில் ரணில்: வாஜ்பாயுடன் இன்று சந்திப்பு
டெல்லி:
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். பிரதமர் வாஜ்பாய்உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்துவரும் நிலையில் ரணில் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் குறித்து அவர் இந்திய அரசிடம் விளக்கிக் கூறவுள்ளார்.இதற்காக வாஜ்பாய், வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட தலைவர்களைசந்திக்கவுள்ளார் ரணில்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் இந்தியாவுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்திலும் ரணில் கையெழுத்திடவுள்ளார்.
இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள ரணில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், குஜ்ரால் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்துப்பேசவுள்ளார்.
புலிகள் மீதான தடையை இந்தியா இன்னும் விலக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications