கடலூர் சிறையில் பொன்முடி அடைப்பு
விழுப்புரம்:
விழுப்புரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட நேரப் பிடிவாதத்திற்குப் பின்னர்தான் அவர் சிறைக்குள்ளேயேசென்றார்.
விழுப்புரம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து கலாட்டாவில் ஈடுபட்டதாகக் கூறிபொன்முடி, விழுப்புரம் நகராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை நேற்று போலீசார்அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைக் கடலூர்மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை கடலூர் மத்திய சிறைக்கு பொன்முடி கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அங்கு சிறை வாசலிலேயே பிடிவாதமாக நின்று கொண்ட பொன்முடி, சிறைக்குள் நுழையமறுத்து விட்டார்.
இதையடுத்து நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு பொன்முடியும், மற்றவர்களும் சிறைக்குள் கொண்டுசெல்லப்பட்டனர்.
திமுகவினர் ரகளை:
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் நடத்தியபோராட்டத்தில் 12 பஸ்கள் சேதமடைந்துள்ளதாகப் போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் அதிமுகவைச் சேர்ந்த பலருடைய வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் கூடதிமுகவினர் பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார்தெரிவித்தனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications