மத்திய பட்ஜெட்: ஜெ. வரவேற்பு
சென்னை:
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
2003-04ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட் குறித்து ஜெயலலிதா கருத்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் சிலதிட்டங்களை அறிவிக்காததுதான் ஏமாற்றம் தருவதாக உள்ளது.
மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களை சர்வதேச அளவில் மிகப் பெரிய விமானநிலையங்களாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தப் பட்டியலில் சென்னை விமான நிலையம் சேர்க்கப்படாதது பெருத்த ஏமாற்றம்தருவதாக உள்ளது.
உர விலையை ஏற்றியிருப்பது விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதைமறுபரிசீலனை செய்ய வேண்டும்.
"அந்தோயதயா" திட்டத்தின் மூலம் மேலும் 50 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்வரவேற்கப்பட வேண்டியது.
அதேபோல் வீட்டு வசதித் துறையில் வரிச் சலுகைகள் அளித்திருப்பதும் பாராட்டுக்குரியது என்றுஅவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருணாநிதியும்...
இதற்கிடையே கருணாநிதியும் மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்.
ஆனால் பெட்ரோல், டீசல் மற்றும் உரம் ஆகிவற்றின் விலை உயர்வால் பொதுமக்களும்விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் உர விலை உயர்வை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய நிதி அமைச்சர்ஜஸ்வந்த் சிங் இன்று உறுதியாகக் கூறிவிட்டார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications