சென்னை ஓட்டலில் வெளிநாட்டு இந்திய பெண் நீதிபதி தற்கொலை
சென்னை:
தென் அமெரிக்க நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர்சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்க மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா லண்டனில் சட்டம் பயின்றார். பின்னர்தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.
60 வயதான நீதிபதி கிறிஸ்டினா தன் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன் அவர் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக அவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில்சிகிச்சை பெற்றும் குணமாகாததால் அவர் மிகவும் மன வேதனையுடன் இருந்தார்.
இந்நிலையில் சென்னைக்கு வந்திருந்த கிறிஸ்டினா அடையாற்றில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்அறை எடுத்து தங்கியிருந்தார்.
நேற்று அவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் ஓட்டல் ஊழியர்கள்கதவை உடைத்துத் திறந்தனர். அங்கு கிறிஸ்டினா படுக்கையில் இறந்து கிடந்தார்.
அருகில் உள்ள மேஜையில் "ஹவ் டு கமிட் சூஸைட்" என்ற புத்தகமும், கிறிஸ்டினா எழுதிய கடிதம்ஒன்றும் இருந்தது. தன் உடலை பெசன்ட் நகர் மயானத்தில் அடக்கம் செய்து விடுமாறு அதில்கோரியிருந்த அவர், அதற்கான செலவுக்காக ரூ.40,000 பணத்தையும் வைத்திருந்தார்.
கிறிஸ்டினாவின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டபோது அவர் குளிர்பானத்தில் அளவுக்குஅதிகமாக தூக்க மருந்தைக் கலந்து சாப்பிட்டிருந்தது தெரிய வந்தது.
இந்தத் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications