குப்பைக்கு வந்த வாழ்வு: "சிம்" கார்டுகளில் தங்கம் எடுக்கும் கில்லாடிகள்
திண்டுக்கல்:
செல்போன்களில் உபயோகப்படுத்தி முடிக்கப்பட்ட பிரீ பெய்ட் "சிம்" கார்டுகளுக்கு பெரும் கிராக்கிஏற்பட்டுள்ளது.
ப்ரீபெய்ட் "சிம்" கார்டுகளைப் பயன்படுத்திய பலரும் அதை ரீ சார்ஜ் செய்யாமல் தூக்கி எறிவதுவழக்கம். இத்தகைய கார்டுகளுக்குத் தற்போதும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
காரணம்- அதில் பூசப்பட்டுள்ள தங்கம். பேட்டரி கனெக்ஷனுக்காக அதில் உள்ள தாமிரத்தால் ஆனசர்க்யூட்டின் மேல் தங்க முலாமும் பூசப்படுகிறது. இதைத் தெரிந்து கொண்ட நம் ஊர் ஆசாமிகள் சிம்கார்டுகளில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
30 சிம் கார்டுகளில் இருந்து ஒரு கிராம் தங்கம கிடைத்துவிடுகிறதாம்.
இதனால் தூக்கி எறியப்படும் "சிம்" கார்டுகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. குப்பைபொறுக்குபவர்களுக்கும் இது தெரிந்துவிட்டதால் தாங்கள் சேர்க்கும் குப்பைகளில் இருந்து சிம்கார்டுகளைத் தனியே பிரித்தெடுத்து அதிக விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு "சிம்" கார்டை ரூ.10 வரை விற்று வருகின்றனர். சுமார் 30 "சிம்" கார்டுகளில் உள்ள தங்கத்தைப்பிரித்து எடுத்து விட்டால் அது ஒரு கிராம் வரை தேறுகிறது. ஆக, 300 ரூபாயில் ஒரு கிராம் தங்கம்கிடைத்துவிடுகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.525 ஆகும்.
குப்பையில் இருந்து தங்கம் எடுக்கும் இந்த கில்லாடி வேலை திண்டுக்கல் பகுதியில் தான்ஆரம்பித்தது. மிக வேகமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications