விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகிறது
சென்னை:
தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும் என்று தெரிகிறது.
மின் கட்டண சீரமைப்புக்கான ஒழுங்கு முறை ஆணையம் இன்று அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவிவசாய சங்கங்களுடன் நேர்காணல் கூட்டம் ஒன்றை நடத்தியது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆணையத்திடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
தமிழக அரசுக்குக் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக வருவாயில் 30 சதவீதம் வரைஇழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலவச மின்சாரத்தைத் தொடர்ந்தால் தமிழக மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க இயலாத நிலை உள்ளது.
இருந்தாலும் அதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து விவசாய பம்ப் செட்டுகளுக்கும், குடிசைவீடுகளுக்கம் இலவச மின்சாரத்தைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றுஅம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தர முடியாது என்பதை தமிழக அரசு மறைமுகமாகத்தெரிவித்துவிட்டது. இதனால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
மின் கட்டணம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மின் ஒழுங்கு முறை ஆணையத்திடம்தான் உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பணம்ஏதும் தர மாட்டோம் என தமிழக அரசு கூறியுள்ளதால் இலவச மின்சாரத்தையே ரத்து செய்யுமாறுஅந்த ஆணையம் பரிந்துரைக்கும்.
இதனால் இலவச மின்சாரம் ரத்தாகும்.
இக் கூட்டத்தில் திமுக விவசாய அணிச் செயலாளரும், அனைத்து விவசாய சங்கங்களின்கூட்டமைப்புத் தலைவருமான கே.பி. ராமலிங்கம் பேசுகையில்,
விவசாயத்திற்குச் செலவிடுவது என்பது நம் நாட்டின் ராணுவத்திற்குச் செலவிடுவதைப்போன்றதாகும். 10 ஆண்டுகளாகியும் போர் வராமல் இருந்தாலும் ராணுவத்திற்கான செலவுகள்நிறுத்தப்படுவதில்லை.
அதேபோல் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இலவச மின்சாரத்தையும் நிறுத்தவேகூடாது. ஒவ்வொரு நாளும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்நம் விவசாயிகள்.
தமிழகத்தில் வேறு எந்தப் பிரிவைச் சேர்ந்த மக்களும் பட்டினிச் சாவுக்கு ஆட்படவில்லை. ஆனால்சுமார் 20 விவசாயிகள் பட்டினியால் இறந்துள்ளனர். உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள்பட்டினியால் இறந்து மடிகின்றனர்.
இந்நிலையில் இலவச மின்சாரம் வழங்கப்படுவதில் சிறு மாற்றத்தைக் கூட ஆணையம்பரிந்துரைக்கக் கூடாது. அப்படி இலவச மின்சாரத்தை ரத்து செய்து, கட்டணம் விதிக்கப்பட்டாலும்கூட அதைக் கட்டுவதற்கு நாங்கள் மறுப்போம். இதற்காகப் போராடவும் நாங்கள் தயாராகஉள்ளோம் என்றார் ராமலிங்கம்.
கடும் வறட்சி காரணமாக சோற்றுக்கு விவசாயிகள் தள்ளாடி வரும் நிலையில் இந்த இலவச மின்சாரம் ரத்தாவதுநிலைமையை மேலும் மோசமாக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications