போராட்டம்.. கண்டனப் பேரணி.. ஆர்ப்பாட்டம்...
சென்னை:
நீதிமன்றங்களில் ஊழியர்கள், நீதிபதிகள் காலியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி தமிழகஅரசை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
நீதித்துறைக்குப் போதிய நிதி ஒதுக்குவதில்லை என்று சமீபத்தில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிசுபாஷன்ரெட்டி தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்ற வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே தமிழகம்முழுவதிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 18ம் தேதிநீதிமன்றங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு நீதித்துறை அலுவலர் சங்கமும் முடிவுசெய்துள்ளது.
ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்:
மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டனப் பேரணிநடத்தினர்.
சி.ஐ.டி.யூ. சார்பில நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவேண்டும், ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்சிக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இவர்கள் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றனர். ஆனால்,அவர்களது மனுவை ஆணையர் வாங்க மறுத்துவிடு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனால் ஆணையர் அலுவலகம் முன் ஆட்டோ ஓட்டுனர்கள் கோஷமிட்டனர். பின்னர்அவர்களது மனுவை அந்த லுவலக ஊழியர் ஒருவர் பெற்றுக் கொண்டார்.
துப்புறவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை நகரில் துப்புறவுப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து மாநகராட்சித்துப்புறவுத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் தனியார் மூலம் துப்புறவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்கு மாநகராட்சித் துப்புறவுத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இந் நிலையில் மேலும் சில பகுதிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதையடுத்து மாநகராட்சித் துப்புறவுத் தொழிலாளர்கள் கீழ்ப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications