1991ம் ஆண்டு காவிரி கலவரம்: தமிழர்களுக்கு ரூ. 2.05 கோடி நிவாரணம் தர கர்நாடகத்துக்கு உத்தரவு
பெங்களூர்:
1991ம் ஆண்டில் கர்நாடகத்தில் நடந்த காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ.2.05 கோடியை ஒதுக்குமாறு மாநில அரசுக்கு காவிரிக் கலவர நிவாரண ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அந்த நிதியை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தைத் தொடர்பு கொண்டு நிவாரணம் குறித்த தகவல்களை அறியலாம் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கலவரத்தில் லட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் தாக்குலுக்குஉள்ளாயின. பலர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் உயிருக்கு அஞ்சி தமிழகத்துக்குத் தப்பி வந்தனர். பங்காரப்பா முதல்வராகஇருந்தபோது நடந்த அந்தக் கலவரத்துகுக்கு முக்கிய காரணமே அவர் தான்.
இந்தத் தமிழர்களுக்கு நஷ்டஈடு கோரி பெங்களூர் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடின.இதையடுத்து நீண்டகாலத்துக்குப் பின் காவிரிக் கலவர நிவாரண ஆணையத்தை அரசு அமைத்தது.
அந்த ஆணையம் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணைகள் கடந்தஆண்டு ஆகஸ்டில் முடிவடைந்தன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ. 2.05 கோடி வழங்க மாநில அரசுக்கு இந்தஆணையம் உத்தரவிட்டது.
ஆனால், சூறையாடப்பட்ட தமிழர்களின் சொத்துக்கள் பல கோடிகளைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணையத்தின் உத்தரவுப்படி இந்த நிவாரண நிதியை வழங்க கர்நாடகம் வழங்கியாக வேண்டும். எனவே,பாதிக்கப்பட்ட தமிழர்கள் பெங்களூர் தமிழ் சங்கத்தை அணுகி நிவாரணம் பெறுவதற்கான வழிவகைகளை அறிந்துகொள்ளலாம். நிவாரணம் பெற சங்கம் உதவி செய்ய உள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications