மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
சென்னை:
மின் கட்டண உயர்வுக்கும், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கும் பல்வேறு அரசியல்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறுகையில், இலவசமின்சாரத்தை ரத்து செய்துள்ளதால் தமிழகத்தில் 13 லட்சம் குடிசைவாசிகள் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே வறட்சியால் வாடிப் போயுள்ள விவசாயிகளுக்கு இது பெரும் மரண அடியாக இருக்கும்.இதனால் தமிழகத்தின் பொருளாதாரமே பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே ஆணையத்தின் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என்றார்.
திமுக விவசாயிகள் அணிச் செயலாளர் கே.பி. ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்துவரும் 18ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி விவசாய அணிகள் மற்றும் விவசாயிகள்சங்கங்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, மின் கட்டண உயர்வு, இலவச மின்சாரம் ரத்து ஆகியவற்றை எதிர்த்து போராட்டம்நடத்தப் போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலவசமின்சாரத்தை ரத்து செய்துள்ளதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
ஆணையத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தினால் லட்சக்கணக்கான விவசாயிகள்பாதிக்கப்படுவர். விவசாயத் தொழிலே நசிந்துவிடும்.
கட்டண உயர்வைக் கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி, பிற எதிர்க்கட்சிகளுடனும் சேர்ந்துகாங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications