நெய்வேலி புதிய மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்: பல கோடி ரூபாய் இழப்பு
நெய்வேலி:
நெய்வேலியில் சமீபத்தில் இயங்கத் தொடங்கிய புதிய மின் நிலையத்தில் இயந்திரக் கோளாறுகாரணமாக மின் உற்பத்தி முழுவதுமாக நின்று போய் விட்டதால் பல கோடி ரூபாய் இழப்புஏற்பட்டுள்ளது.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்தாலிய நிறுவனம் ஒன்றுதான் இந்தப் புதியமின் நிலையத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால் இந்த மூன்று மாதங்களில் இந்த மின் நிலையத்தில் உள்ள பல கருவிகள் அடிக்கடி பழுதாகிக்கொண்டே இருந்தன. இதனால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்படுவதும் சர்வசாதாரணமாகிக் கொண்டு வந்தது.
இந்நிலையில் இந்தப் புதிய மின் நிலையம் நேற்று இரவு முழுவதுமாகப் "படுத்து" விட்டது. பலஇயந்திரங்கள் செயல்படாமல் போனதால் மின் உற்பத்தி அடியோடு நின்று விட்டது.
இதனால் ஒரு நாளைக்கு ரூ.6 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று கூறிய நெய்வேலி அனல் மின்நிலைய அதிகாரி ஒருவர், இந்த நஷ்டத்தை சம்பந்தப்பட்டுள்ள இத்தாலிய நிறுவனம்தான் அளிக்கவேண்டும் என்றும் இந்த மின் நிலையத்தை மீண்டும் அந்த நிறுவனம்தான் வந்து இயங்க வைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த மின் உற்பத்தி நிறுத்தத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படும் என்றுகருதப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications