உசிலம்பட்டி: குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் சிசு
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை குப்பைத் தொட்டியில்வீசப்பட்டது. அதை மீட்டு தீவிர சிகிச்சை கொடுத்தும் பரிதாபமாக அந்த சிசு பரிதாபமாக இறந்தது.
பெண் சிசுக் கொடுமைகளுக்குப் பெயர் போன உசிலம்பட்டி சமீப காலமாக செய்திகளில் அடிபடாமல் இருந்தது.பெண் சிசுக் கொலை குறைந்து விட்டதாகக் கருதப்பட்ட நேரத்தில் இப்போது மிகவும் அதிர்ச்சிகரமான ஒருசம்பவம் உசிலம்பட்டியில் நடந்துள்ளது.
உசிலம்பட்டி-சந்தைப்பேட்டை அருகில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுஒன்று கிடந்தது. அதன் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர்.
உடனே குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தசிசுவை காப்பாற்ற டாக்டர்களும் கடுமையாகப் போராடினர்.ஆனால் அந்தக் குழந்தை சிறிது நேரத்தில் பரிதாபமாகஇறந்தது.
பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் இருந்து மீட்ட பிறகும் அதைக் காப்பாற்ற முடியவில்லையே என்றுஅந்தப் பகுதி மக்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications