ராமநாதபுரத்தில் 9 ஈ.பி.ஆர்.எல்.எப். போராளிகள் கைது
ராமநாதபுரம்:
ராமேஸ்வரம் வழியாக கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த 9 இலங்கைபோராளிகளை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) என்ற போராளிகள்அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
ராலிஸ், ஸ்ரீரஞ்சன், எமர்சன் என்ற ராஜா, ரவி என்ற சின்னவன், ரவி என்ற குட்டி, மோகன் என்ற குட்டி, ருக்மனன்என்ற தாஸ், கார்த்திக், செல்வம் என்ற சிவராஜா ஆகிய 9 பேரும் கடந்த 1990ம் ஆண்டு ராமேஸ்வரத்திற்குஅகதிகளாக வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அனைவரும் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மண்டபம்அகதிகள் முகாமில் இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் புழல் மற்றும் திருச்சி அகதிகள் முகாம்களுக்குமாற்றப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி இவர்கள் 9 பேரும் அகதிகள் முகாமிலிருந்து தப்பினர். பின்னர் மதுரை வந்துஅங்கிருந்து பஸ் மூலம் ராமநாதபுரத்தை அடைந்தனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர்.
அங்கிருந்து அவர்கள் கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்கு செல்லத் திட்டமிட்டிருந்தனர். இவர்களின்நடமாட்டம் குறித்து சந்தேகம் அடைந்த போலீஸார் அனைவரையும் விசாரித்தபோதுதான் அவர்களின் திட்டம்தெரிய வந்தது. இதையடுத்து 9 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அகதிகள் முகாம்களில் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், வேலை தேடி சென்னை தெருக்களில் பல காலமாகஅலைந்ததாகவும், கிடைத்த வேலைகளும் சரிவர இல்லாத காரணத்தால் சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்ல முடிவுசெய்ததாகவும் கைதான போராளிகள் தெரிவித்தனர்.
சாதாரண முறையில் இலங்கை செல்வது கடினம் என்பதால்தான் கள்ளத் தோணிகள் மூலம் இலங்கை செல்லதிட்டமிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை மீனவர்களுக்கு 15 நாள் காவல்:
இதற்கிடையே தூத்துக்குடி அருகே இந்திய கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 19 இலங்கைமீனவர்களும் ராமநாதபுரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை மறுநாள் (இன்று) மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதிபதி ரவீந்திரன்உத்தரவிட்டார். அதுவரை அவர்களை போலீ"ஸ் காவலில் வைக்கவும் அவர் அனுமதி அளித்தார்.
அதன்படி இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட 19 இலங்கை மீனவர்களையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதிரவீந்திரன் உத்தரவிட்டார். இந்த 19 மீனவர்களும் சிங்களர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications