புதிய தலைமை செயலகம்: ராணி மேரி கல்லூரி இடிப்பு?
சென்னை:
சென்னையில் உள்ள பழம்பெருமை வாய்ந்த ராணி மேரி கல்லூரியை இடித்து விட்டு தமிழக அரசுஅங்கு புதிய தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது சென்னை-கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தை இடம் மாற்ற அரசு முடிவுசெய்தது. கடற்கரை அருகே உள்ள லேடி வெல்லிங்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்புஉள்ள இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைக்க முதலில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அந்த இடம் போதாது என இது தொடர்பாக ஆய்வு செய்த வல்லுநர் குழு தெரிவித்தது.மேலும் அப்பகுதியில் குடிசை போட்டு வசிக்கும் மீனவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்புதெரிவித்தனர்.
இதையடுத்து கடற்கரைச் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி மற்றும் விவேகானந்தா இல்லம்ஆகியவற்றுக்கு இடையே தலைமைச் செயலக கட்டடத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கும் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் சமூகசேவகியான மேதா பட்கரின் தலைமையில் மீனவர்கள் பெரும் போராட்டம் நடத்தினர் என்பதுநினைவிருக்கலாம்.
இந்நிலையில் ராணி மேரி கல்லூரியையும் இடித்து விட்டு அங்குள்ள 26 ஏக்கர் நிலத்தில் தலைமைச்செயலகத்தைக் கட்டலாம் என்று கட்டட நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதைஅரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
100 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது ராணி மேரி கல்லூரி. அங்கு சுமார் 3,000 மாணவிகள்படித்து வருகிறார்கள்.
அந்தக் கல்லூரியை இடித்து விட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்டினால் அது மன்னிக்க முடியாதசெயலாகும். கவர்ச்சிகரமான திட்டங்களை நிறைவேற்றுகிறோம் என்ற போர்வையில் இப்படித்தான்கோடிக் கோடியாக பணத்தைப் பாழடிப்பதா?
இந்தத் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக மக்களுக்கும், குறிப்பாகவிவசாயிகளுக்கும் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. அவற்றை முதலில் அரசு தீர்த்து வைக்கமுயற்சிக்க வேண்டும்.
அவற்றை எல்லாம் விட்டுவிட்டு சுய லாபத்திற்காக அரசு இப்படி நடந்து கொள்வதை வன்மையாகக்கண்டிக்கிறேன். அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து பாமக சார்பில் விரைவில் மிகப் பெரும்போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் ராமதாஸ்.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications