சதாமை குறி வைக்கும் புயலின் நிழல் குண்டுகள்
குவைத்:
அதிபர் சதாம் ஹூசேன் பாதாள அறைகளில் தான் பதுங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளதால் அவற்றைத்தகர்க்கும் அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் ஈராக்கை பிரிட்டிஷ் விமானங்கள் தாக்க ஆரம்பித்துள்ளன.
புயலின் நிகழ் (Storm Shadow) என்ற பெயர் கொண்ட அந்த குண்டுகளை பிரிட்டனின் டொர்னேடோ ரகபோர் விமானங்கள் ஈராக் மீது செலுத்த ஆரம்பித்துள்ளன. இவை தரையில் விழுந்தவுடன் பூமியைத் துளைக்குக்கொண்டு மிக ஆழமாகச் சென்று வெடிக்கும்.
இதன் மூலம் பாதாள அரண்கள் தகர்த்து எறியப்படும். சதாம் ஹூசேனும் அவரது மூத்த அமைச்சர்கள்,குடும்பத்தினர் தங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடங்களின் மீதெல்லாம் இந்த குண்டுகள் வீசப்பட்டுவருகின்றன.
குவைத்தில் உள்ள அலி அல் சலாம் விமான தளத்தில் இந்த குண்டுகள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுளளன.இரண்டாம் உலகப் போரின்போது இவை பாலங்களைத் தகர்க்க பயன்படுத்தப்பட்டன. இப்போது இந்தகுண்டுகளை மாற்றி வடிவமைத்து பாதாள அறைகளை உடைக்கும் திறன் கொண்டவையாக பிரிட்டன்தயாரித்துள்ளது.
பாஸ்ராவில் 77 பேர் பலி:
இதற்கிடையே ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான பாஸ்ராவின் மீது அமெரிக்க விமானப் படைவிமானங்கள் நடத்திய தாக்குதலில் 77 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.
சதாமின் மூத்த மகன் பலி?:
போரின் தொடக்க நாள் அன்று தெற்கு பாக்தாக் மீது அமெரிக்கா நடத்திய டாமஹாக் ஏவுகணைத் தாக்குதலில்அதிபர் சதாம் ஹூசேனின் மூத்த மகன் உதய் பலியாகியிருக்கலாம் என பிரிட்டிஷ் உளவுப் பிரிவு கருதுகிறது.
இத் தாக்குதலில் முதலில் சதாம் இறந்துவிட்டதாக வந்த தகவல்கள் சரியானவை அல்ல என பிரிட்டன் கூறியுள்ளது.இதில் சதாம் காயத்துடன் தப்பிவிட்டதாகவும் மூத்த மகன் உதய் தான் பலியாகி இருக்கக் கூடும் எனவும் பிரிட்டிஷ்உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications