போரை எதிர்த்து போராட்டத்தில் குதித்த 2 லட்சம் அமெரிக்க மக்கள்
நியூயார்க்:
ஈராக் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி அமெரிக்காவில் சுமார் 2லட்சம் பேர் போராட்டம் நடத்தினர்.
ஈராக்கை அமெரிக்கா மிகவும் தீவிரமாகத் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த நாட்டிலேயேஅதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்துள்ளன.
நியூயார்க்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியின்போது போராட்டம் நடத்தியவர்களுக்கும்போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 80 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, சிகாகோ, ஹாலிவுட் உள்ளிட்ட நகரங்களிலும்போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. வாஷிங்டனில் அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகை முன்பாகக் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து பேரணி நடத்தினர்.
போராட்டங்கள் மற்றும் பேரணிகளின்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சைக் கடுமையாகத்தாக்கி கோஷங்கள் எழுப்பப்பட்டன. "புஷ் ஒரு கொலையாளி" என்றும் "முட்டாள்" என்றும் கூடகோஷங்களை எழுப்பினார்கள் மக்கள்.
சான் பிரான்சிஸ்கோவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் போராட்டம் நடத்திய சுமார் 1,500பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய நாடுகளிலும்...
இதற்கிடையே ஆசிய நாடுகளிலும் ஈராக் போரை எதிர்த்து பல்வேறு போராட்டங்களும்பேரணிகளும் நடத்தப்பட்டன.
குறிப்பாக உலகின் மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேஷியாவில் அமெரிக்கக் கொடிகளைஎரித்துப் போராட்டம் நடைபெற்றது.
பாகிஸ்தானில் இன்றும் போரை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. லாகூர் நகரில்பிரம்மாண்டமாணி பேரணி நடைபெறுவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் சுமார் 50,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னையில்...
இதற்கிடையே தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் இன்று சென்னையில் ஈராக் போருக்குஎதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெமோரியல் ஹால் முன்பாக இந்தப் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் ரங்கராஜன், பேராயர் எஸ்ரா சற்குணம் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
ஏராளமான பெண்களும், குழந்கைளும் கூட இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஈராக்மீதான தாக்குதலை உடனடியாக அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிட்டனர்.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications