மேலும் பல தற்கொலை தாக்குதல்களை நடத்த ஈராக் தீவிரம்
பாக்தாத்:
பாக்தாத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்துகொண்டிருக்கின்றன.
இந்திய நேரப்படி இரவு 12.45 மணிக்குத் தொடங்கிய குண்டு வீச்சுத் தாக்குதல் பல மணிநேரங்களுக்கு நீடித்தது.
தெற்கு பாக்தாத் பகுதியில் அடுத்தடுத்து 25 முறை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் அந்தப்பகுதியில் உள்ள வான் பகுதி முழுவதும் கரும் புகையாகத்தான் காட்சி அளிக்கிறது.
மொசூல், பாஸ்ராவிலும்...
இதற்கிடையே மொசூல் நகரையும் அமெரிக்கப் படைகள் தகர்த்து வருகின்றன. வடக்கு ஈராக்கில்உள்ள முக்கிய நகரான மொசூலில் விடிய விடிய குண்டுகளை வீசியுள்ளன அமெரிக்க, பிரிட்டிஷ்விமானங்கள்.
அதேபோல் பாஸ்ரா நகரிலும் தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்தஈராக் அதிபர் சதாம் ஹூசேனின் பிரம்மாண்டமான சிலை ஒன்று தகர்க்கப்பட்டது.
தற்கொலை தாக்குதல்கள் தொடரும்?
இதற்கிடையே பாக்தாத் நோக்கி மேலும் நகர முடியாமல் அமெரிக்கப் படைகள் திணறி வருகின்றன.
பாக்தாத்தைச் சுற்றிலும் அடுத்த ஒரு வார காலத்திற்கு தரைவழித் தாக்குதலை நிறுத்தியுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
பாலைவனப் புயல், ஈராக் வீரர்களின் தற்கொலைத் தாக்குதல் ஆகியவையும் அமெரிக்கப்படைகளைப் பெரிதும் கலங்கடித்துள்ளன.
நேற்றைய தற்கொலைத் தாக்குதலில் நான்கு அமெரிக்கப் படையினர் உடல் சிதறி உயிரிழந்தனர்.மேலும் பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஈராக் படையினர் தயாராகி வருகின்றனர்.
பாக்தாத்தை நெருங்கினாலோ, பாக்தாத் நகருக்குள் நுழைந்தாலோ அமெரிக்க வீரர்கள் தற்கொலைப்படையினரின் குண்டு தாக்குதல்களுக்கு ஆளாவார்கள் என்றும் ஈராக் எச்சரித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 11 தாக்குதல்களைப் போலவே அமெரிக்கா, பிரிட்டிஷ் போன்ற நாடுகளிலும்தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈராக் துணை அதிபர் தாஹா யாசின் ரமதான்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய ரமதான், "இது ஆரம்பம்தான்.இன்னும் பல இனிமையான செய்திகள் உங்களுக்காகக் காத்துக் கொண்டுள்ளன. 500 பேரை ஒரேநேரத்தில் கொல்லக் கூடிய குண்டுகள் எங்களிடம் உள்ளன" என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications