வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் நள்ளிரவில் கைது: இதனால் மீண்டும் இன்று கடையடைப்பு
சென்னை:
கடைகளை மூடுமாறு ஆட்களுடன் சென்று வியாபாரிகளை மிரட்டியதாக தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையனை சென்னை போலீஸார் நள்ளிரவில் அவரதுவீட்டிற்கு சென்று கைது செய்தனர். இதைக் கண்டித்து இன்றும் கடையடைப்பு நடைபெறுகிறது.
மதிப்புக் கூட்டு வரி விதிப்பைக் கண்டித்து அகில இந்திய அளவில் நடந்த வேலை நிறுத்தத்திற்குஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் 2 நாள் கடையடைப்பு நடந்தது. இதற்கு தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.
முதல் நாளாகிய நேற்று முன்தினம் சில பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. இதனால் வணிகர்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கடைகளை அடைக்குமாறுகோரினர்.
இந்நிலையில் நேற்று வெள்ளையன் தலைமையிலான வியாபாரிகள் குழு சில கார்களில்புரசைவாக்கம், கெல்லீஸ் பகுதிகளில் திறந்திருந்த கடைகளுக்குச் சென்று கடைகளை மூடுமாறுவலியுறுத்தியது. சில கடைகளிைன் ஷட்டர்களை அவர்களே இறக்கி விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர்.
போலீஸாரும் உடனடியாக விரைந்து சென்று வெள்ளையன் மற்றும் அவரது குழுவினரைஅங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் வெள்ளையன் அதைக் கண்டு கொள்ளாமல் தனதுசெயலில் தீவிரமாக இருந்தார்.
இந்தப் பின்னணியில் நேற்று நள்ளிரவு வெள்ளையன் வீட்டுக்குப் போலீஸ் படை விரைந்து சென்றுஅவரைக் கைது செய்தது. உடனடியாக அவர் சைதாப்பேட்டை 14வது நீதிமன்ற நீதிபதி வீட்டுக்குஅழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை நடத்திய நீதிபதி அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சென்னைமத்திய சிறைச்சாலையில் வெள்ளையன் அடைக்கப்பட்டார். அவருடன் வணிகர் சங்கங்களின்பேரவை நிர்வாகிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இன்றும் கடையடைப்பு:
இந்நிலையில் வெள்ளையன் கைதைக் கண்டித்து இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சிலபகுதிகளில் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
வெள்ளையன் கைது வியாபாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரைஉடனடியாக விடுதலை செய்யக் கோரி சென்னையில் பெரம்பூர், வண்ணாரப்பேட்டை,வியாசர்பாடி உள்ளிட்ட வட பகுதிகளில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் மற்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்படவில்லை. இயல்பு நிலை காணப்பட்டது.திருநெல்வேலி உள்ளிட்ட சில பகுதிகளிலும் ஓரளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வெள்ளையன் விடுதலை தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மாலை நடைபெறும்ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று பேரவை துணைத் தலைவரான மோகன்தெரிவித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications