அயோத்தி: "அல்லா" பெயர் பொறித்த கல் கண்டெடுப்பு
அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காக நடைபெற்று வரும்அகழ்வாராய்ச்சிப் பணிகளின்போது "அல்லா" என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்கிடைத்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிய அந்த இடம்முழுவதையும் தோண்டிப் பார்த்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என கடந்த மாதம் 5ம் தேதிஅலகாபாத் உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஒரு மாதத்திற்குள் இந்த ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மத்திய தொல்பொருள் துறை தன்னுடைய அகழ்வாராய்ச்சிப் பணிகளைத்தொடங்கியது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தைத் தோண்டி ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
சங்குகள், கிளிஞ்சல்கள், அடுப்புகள் உள்ளிட்ட பழங்காலத்தைச் சேர்ந்த பொருள்கள் அவ்வப்போதுகிடைத்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று பூமியைத் தோண்டியபோது "அல்லா" என்ற பெயர் பொறிக்கப்பட்ட பச்சைநிறத்திலான ஒரு கல் கிடைத்தது. இந்தக் கல்லில் உருது மொழியில் "அல்லா" என எழுதப்பட்டிருந்தது.
இதைத் தவிர மனித முகம் பொறிக்கப்பட்ட கற்கள் உள்ளிட்ட 23 பொருள்களும் நேற்று பூமியைத்தோண்டியபோது கிடைத்தன.
பூமிக்கு அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தனி பைகளில்போடப்பட்டு சீலிட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications