வைகோ விவகாரம்: மத்திய அரசின் புதிய மனு இன்னும் தாக்கலாகவில்லை
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது தவறு என்று குறிப்பிடும் மத்திய அரசின் மனுஇன்னும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபடவில்லை.
பொடா சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்தவழக்கில் கடந்த மாதம் 29ம் தேதி பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, விடுதலைப்புலிகளைஆதரித்து வைகோ பேசியது தீவிரவாதச் செயலே என்று கூறி இருந்தது.
இந்த மனு மதிமுக, திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்தவிவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலையிட்டதைத் தொடர்ந்து அம்மனுவில் தவறு ஏற்பட்டுவிட்டதாகவும் அதைத் திருத்துவதாகவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
தன்னுடைய ஜூனியர் வக்கீல்கள் மீது பழியைத் தூக்கிப் போட்ட சொராப்ஜியும் தவற்றைத் திருத்திபுதிய மனு தாக்கல் செய்யப்படும் என்றார். இதையடுத்து கடந்த 31ம் தேதி அந்த பதில் மனுவைதிரும்பப் பெற்றுக் கொண்டு, மற்றொரு புதிய பதில் மனுவை தாக்கல் செய்யப் போவதாக அறிவித்தார்சொராப்ஜி.
இந்த திருத்தப்பட்ட மனுவை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், 2நாட்களில் ஏன் மனுவை மாற்றினீர்கள் என்று கேட்ட நீதிபதிகள் இதை வழக்குவிசாரணையின்போது தாக்கல் செய்தால் போதும் என்று கூறிவிட்டனர்.
இதனால் மனு இன்னும் தாக்கலாகவில்லை.
2 மாதங்களுக்கு முன்பே...
தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்வது பொடாசட்டத்தின் கீழ் குற்றமாகி விடாது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல்சோலி சொராப்ஜி 2 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசிடம் கூறியுள்ளார். இந்த விவரம் இப்போதுதான் தெரியவந்துள்ளது.
மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பன் புலிகளை ஆதரித்துப் பேசி வருவதாகக் குற்றம்சாட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஜெயலலிதா,எனவே அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
ஆனால் கண்ணப்பன் இந்தக் குற்றச் சாட்டை மறுத்தார். இது தொடர்பாக மத்திய அரசிடம் அவர்விளக்கம் அளிக்கையில், புலிகள் இலங்கை தமிழர்களுக்காகப் போராடுகிறார்கள் என்றவகையில்தான் அவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். இதனால் இந்தியாவில் அவர்களதுசெயல்பாட்டை ஆதரிப்பதாக அர்த்தமாகாது என்று கூறியிருந்தார் கண்ணப்பன்.
இதையடுத்து கண்ணப்பன் பேசிய விவரங்கள் பொடா சட்டத்தை மீறியுள்ளனவா என்பது குறித்துஆராய்ந்து கருத்துத் தெரிவிக்குமாறு சொராப்ஜியிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
கடந்த ஜனவரி இறுதியில் மத்திய அரசுக்கு இது தொடர்பாகப் பதிலளித்தார் சொராப்ஜி. அதில், தடைசெய்யப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத்தை ஆதரித்து சாதாரணமாகப் பேசுவது பொடா சட்டத்தின்21வது பிரிவின் கீழ் குற்றமாகி விடாது என்று மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த சொராப்ஜி வைகோ பேசியது தீவிரவாதசெயல்தான் என்று ஏன் தன் மனுவில் குறிப்பிட்டார் என்று தெரியவில்லை. மத்திய அரசில் யாரோ(ஜெ. ஆதரவு அத்வானி கோஷ்டி?) நெருக்குதல் கொடுத்துத் தான் அவர் இவ்வாறு மனு செய்திருக்கவேண்டும் என்பது உறுதியாகிறது.
இதற்கிடையே மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரன் விழுப்புரத்தில்இன்று நிருபர்களிடம் பேசுகையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட பதில் மனுவைபரிசீலித்து வருகிறோம். பரிசீலனையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துதீர்மானிப்போம் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications