சட்டமன்றத்தில் ஜெ.- எதிர்க் கட்சிகள் கடும் வாக்குவாதம்
சென்னை:
அரசின் வருவாயில் 94 சதவீதம் அரசு ஊழியர் ஊதியத்துக்கே போய்விடுவதாக தமிழக அரசு சொல்வது தவறுஎன சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன் வாதாடினார்.
அவருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே தொடர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும்வாக்குவாதம் நடந்தது.
பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய துரைமுருகன், கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலைமைசீரழிந்துவிட்டதாகவும் இப்போது அதிமுக ஆட்சியில் அதை சரி செய்துவிட்டதாகவும் நிதியமைச்சர் பொன்னையன்ஏதோ வானத்தையே வில்லாக வளைத்துவிட்டது மாதிரி பேசுகிறார்.
வருவாயில் 94 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவும் பென்சன் தரவுமே காலியாகிவிடுவதாகக்கூறுகிறீர்கள்.இது மொத்த வருவாயிலா?, நிகர வருவாயிலா?. ஒவ்வொரு நாளும் ஒரு கணக்கு சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தாக்கல் செய்த பட்ஜெட்படி பார்த்தால் கூட அரசு ஊழியர் ஊதியம், பென்சனுக்கு58.64 சதவீதம் தானே செலவு செய்யப்படுகிறது.
இதிலும் கூட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள், டாக்டர்கள் ஆகியோரின் ஊதியமும்அடங்கும்.
முதல்வர் ஜெயலலிதா: திமுக ஆட்சியில் அரசு ஊழியர் ஊதியம், பென்சனுக்கு மட்டும் 102.85 சதவீதத்தை செலவுசெய்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து தருவது சாத்தியமில்லை என உலக வங்கியின் ஆய்வுக் குழு கூறிவிட்டது.
துரைமுருகன்: உலக வங்கியிடம் நாம் கடன் வாங்குகிறோம். இதனால் அவர்கள் சொல்வதை நாம் கேட்டாகவேண்டும் தான். அதற்காக அவர்கள் சொல்வதற்கு எல்லாம் பணிந்து போக வேண்டிய அவசியம் என்ன?
நிதியமைச்சர் பொன்னையன்: யாரும் பணிந்துபோகவில்லை. உலக வங்கியிடம் மாநில அரசு கடன் வாங்கமுடியாது. மத்திய அரசு தான் வாங்கித் தர முடியும்.
துரைமுருகன்: பட்ஜெட்டை தயாரிக்க அதிகாரிகள் தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இதை ஏதோ முதல்வரேதயாரித்தது மாதிரி பேசுகிறீர்கள்.
பொன்னையன்: அதிகாரிகளே வியந்து போகும் அளவுக்கு துல்லியமான விவரங்களை விரல் நுனியில்வைத்திருப்பவர் புரட்சித் தலைவி. அவரைப் புகழ்வதைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்.
துரைமுருகன்: நாங்கள் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி 30 சதவீதத்தை நிறுத்தி வைத்தோம். நீங்கள்உங்கள் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் வீட்டு வாடகைப்படியைத் தருவோம் என்று உறுதியளித்தீர்கள்.ஆனால், குதிரையையும் தள்ளிவிட்டு குழிபறித்த கதையாகிவிட்டது.
ஜெயலலிதா: இந்தியாவிலேயே அதிகமான அரசு ஊழியர்களைக் கொண்ட மாநிலம் தமிழக அரசு தான்.இவர்களுக்கு ஊதியம், பென்சன் தரவே இவ்வளவு தொகையை செலவு செய்தால் மாநில அரசு திவாலாகிவிடும்என உலக வங்கி ஆய்வுக் கமிட்டி கூறிவிட்டது.
துரைமுருகன்: கமிட்டி போட்டுவிட்டால் போதும். நாம் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்.
இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்திலும் இதே போன்ற வாக்குவாதம் நடந்தது.
நிதியமைச்சர் பொன்னையன்: இலவச மின்சாரத்தையே ஏதோ திமுக அரசு தான் கொண்டு வந்தது போலதிமுகவினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஏழை, சிறிய விவசாயிகளுக்கு உதவ இத் திட்டத்தை எம்.ஜி.ஆர். தான்கொண்டு வந்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இத் திட்டத்தை பணக்கார விவசாயிகளுக்கும் நீட்டித்தார்.பணக்காரர்களின் பிரதிநிதியாக கருணாநிதி உள்ளார்.
இதன் பின்னர் கடந்த முறை ஆட்சியில் இருந்த கருணாநிதி, விவசாய மோட்டார்களுக்கு மீட்டர் பொறுத்தவும்மின்சாரத்துக்கு பணம் வசூலிக்கவும் மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டார். இதன் மூலம் விவசாயிகளின் இலவசமின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவாயிகளுக்கு தீங்கு இழைத்ததும் கருணாநிதி தான்.
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் (காங்கிரஸ்): மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கும் சட்டம் அதிமுகமத்திய அரசில் இடம் பெற்றபோது தான் கொண்டு வரப்பட்டது. இதனால் தான் இலவச மின்சாரம் ரத்தானது.தேர்தல் அறிக்கையில் இலவச மின்சாரம் தருவோம் என்று கூறிவிட்டு இப்போது அதிமுக தடம் புரண்டது ஏன்?
பொன்னையன்: இலவச மின்சாரம் ரத்தானாலும் அதற்கான கட்டணத்தை வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
ஜெயலலிதா: 1998ம் ஆண்டு மத்திய அரசில் அதிமுக இடம்பெற்ற போது இந்த சட்ட நகலை என்னிடம்காட்டினர். நான் அதில் திருத்தம் செய்ய வைத்தேன். இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் பாதிக்கப்படும்விவசாயிகளுக்கு மாநில அரசு மானியம் வழங்கலாம் என்று சட்டத்தைத் திருத்தச் செய்தேன்.
துரைமுருகன்: 1991ம் ஆண்டிலேயே நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்துசெய்தீர்கள். ஏழை விவசாயிகளுக்கு உதவும் இலவச மின்சாரத்தின் மீது உங்களுக்கு ஏன் அவ்வளவு அவர்ஷன்?
எஸ்.ஆர்.பி: விவசாயிகளுக்கு உதவ ரூ. 100 கோடி தருகிறேன் என்கிறீர்கள். ரூ. 200 கோடி கொடுங்கள் என்றுகேட்கிறோம். நாங்கள் எதைச் சொன்னாலும் அதை நீங்கள் கேட்கப் போவது இல்லை. இதனால் உங்களைக்கண்டித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்கிறது என்றார்.
இதையடுத்து காங்கிரஸ், திமுக தலைமையில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆனால், பா.ஜ.க.உறுப்பினர்கள் மட்டும் அவையில் உட்கார்ந்து இருந்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications