இலங்கை: 7வது சுற்று பேச்சுக்கள் 29ம் தேதி தொடக்கம்
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 7வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள்வரும் 29ம் தேதி தாய்லாந்தில் தொடங்க உள்ளன.
கடந்த மாதம் 18ம் தேதி ஜப்பானில் தொடங்கிய 6வது சுற்றுப் பேச்சுக்கள் ஈராக் போர் காரணமாக3வது நாளிலேயே நிறுத்தப்பட்டன. இருந்தாலும் 4வது நாளான 21ம் தேதி அந்த சுற்றுப் பேச்சுக்கள்முறைப்படி முடித்து வைக்கப்பட்டன.
இந்நிலையில் வரும் 29ம் தேதி அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்தில் நடக்க உள்ளன.
4 நாட்களுக்கு நடைபெறும் இந்த 7வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது அதிகாரப்பகிர்ந்தளிப்புகள் குறித்து புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே முக்கியமான விவாதங்கள்நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அமைதிப்பேச்சுக்கள் குறித்து நாடு தழுவிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்த இலங்கைஅரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாகப் பரிசீலனை செய்து வருகிறோம் என்று இலங்கை நாடாளுமன்ற விவகாரத் துறைஅமைச்சரான ஜி.எல். பெய்ரிஸ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வெளிப்படையாகஆதரித்து வந்தாலும், ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசு புலிகளை அளவுக்குஅதிகமாக ஆதரிப்பதாக அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார்.
சந்திரிகாவுக்குப் பாடம் புகட்டுவதற்காகவே நாடு தழுவிய வாக்கெடுப்பை நடத்த இலங்கை அரசுமுடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்ற வாக்கெடுப்புக்கள் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளை மேலும்ஊக்குவிக்கும் என்றும் பெய்ரிஸ் கூறினார்.
இதற்கிடையே இலங்கை புனர்வாழ்வு பணிகளுக்காக நிதி திரட்டுவது தொடர்பான கூட்டத்திற்குஅமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. வரும் 14ம் தேதி வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தக்கூட்டத்தில் இந்தியாவும் கலந்து கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் பெய்ரிஸ் தெரிவித்தார்.ஆனாலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள புலிகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுக்கவில்லை.
கடந்த நவம்பர் மாதம் நார்வேயில் நடந்த பிரம்மாண்டமான நிதி திரட்டும் மாநாட்டைப் போலவேவரும் ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் டோக்கியோவில் நிதி திரட்டும் மாநாட்டை ஜப்பான் நடத்தஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளில் ஜப்பான்தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications