ஆசிரியையின் சம்பளத்தை சுருட்டிய பியூன் உள்பட 2 பேர் கைது
ராமநாதபுரம்:
ஆசிரியையின் சம்பளப் பணத்தை சுருட்டியதாக கல்வித் துறையைச் சேர்ந்த 2 பேரை போலீஸார்கைது செய்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை கோமதி அம்மாள். இவருக்குரிய மாதச் சம்பளப் பணத்தைவங்கிக் கணக்கில் சேர்த்து விடுமாறு கூறி மண்டபம் உதவிக் கல்வி அலுவலர் அலுவலகத்தில்பணியாற்றும் அலுவக உதவியாளர் (பியூன்) செந்தில் குமார் மற்றும் சூரிய மூர்த்தி ஆகியோரிடம்கொடுக்கப்பட்டது.
ஆனால் இருவரும் அந்தப் பணத்தை ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொண்டனர்.
தனது சம்பளப் பணம் வராததை அறிந்த கோமதி அம்மாள், உதவிக் கல்வி அலுவலரை அணுகிவிசாரித்துள்ளார். அப்போது செந்தில்குமார் மற்றும் சூரிய மூர்த்தி ஆகியோரிடம் கொடுத்துபணத்தை வங்கிக் கணக்கில் சேர்த்து விடுமாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோமதி அம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணைநடத்தி இருவரையும் கைது செய்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications