மின் நிலையம் சிதைப்பு: இருளில் மூழ்கியது பாக்தாத்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

நேற்றிரவு பாக்தாத் நகரமே இருளில் மூழ்கியது. போர் தொடங்கியது முதல் அந்த நகரில் மின்சாரம் தடைபட்டது இதுவே முதல்முறையாகும்.

பாக்தாதின் மின் கட்டமைப்பை அமெரிக்க விமானங்கள் சிதைத்துவிட்டதால் மின்சாரம் தடைபட்டதாக ஈராக் கூறியுள்ளது.ஆனால், பாக்தாதுக்குள் ஊடுருவும் அமெரிக்கப் படைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த ஈராக்கிய ராணுவமே நகரை இருளில்மூழ்கடித்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

பாக்தாதின் தென் பகுதியில் உள்ள அல்-தெளரா மின் நிலையத்தில் இருந்து தான் நகருக்கு பெரும்பாலான மின்சாரம் வருகிறது.இந்தப் பகுதியில் அமெரிக்க விமானங்கள் கடும் தாக்கியுள்ளன. இதனால் இந்த மின் நிலையம் சேதமடைந்திருக்கலாம் என்றுகூறப்படுகிறது.

மின்தடை நீடித்தால் பாக்தாக் நகரில் தண்ணீர் பஞ்சமும், கழிவு நீர் வெளியேற்றமும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.இதனால் சுமார் 50 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரில் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பாக்தாத் மீதான அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. போர் விமானங்களும் ஆயிரக்கணக்கில்குண்டுகளை வீசி வருகின்றன. இதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். ஆனால், ஈராக்கின் ரிபப்ளிகன்படைப் பிரிவுகளைக் குறி வைத்துத் தான் தாங்கள் தாக்கி வருவதாக அமெரிக்கா கூறுகிறது.

மின் தடை இருந்தபோதும் ஈராக்கிய டிவி செயல்பட்டது. அதில் அதிபர் சதாம் ஹூசேனும் மூத்த பாத் கட்சி நிர்வாகிகள், ராணுவத்தலைவர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தும் காட்சிகள் காட்டப்பட்டன.

ஆனால், ஈராக்கிய டிவியில் காட்டப்படும் சதாம் ஹூசேனின் அனைத்துக் காட்சிகளும் போர் தொடங்குவதற்கு முன்பே பதிவுசெய்யப்பட்டவை என பென்டகன் கூறியுள்ளது. வீடியோக்களை நுண்ணியமாக ஆராயந்தபோது இத் தகவல் தெரியவந்ததாகபென்டகன் நேற்றிரவு அறிவித்துள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+