ஜெ-சந்திரிகா சந்திப்பு: புலிகள் குறித்து பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Chandrika meets jayalalithaaஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார்.

இந்தியாவில் நான்கு நாள் அரசு முறைப் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார் சந்திரிகா.கொழும்பிலிருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார்.

தமிழக நிதி அமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஆகியோர்சந்திரிகாவை விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கிருந்து தமிழக ஆளுநர் மாளிகைக்கு சென்றசந்திரிகாவை அங்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.

ஜெயலலிதாவும் சந்திரிகாவும் சுமார் 70 நிமிடங்கள் பேச்சு நடத்தினர். இது தொடர்பாக தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை குறித்தும், தமிழகத்திற்கும் அந்நாட்டிற்கும் இடையிலானமீனவர் பிரச்சனை குறித்தும் இருவரும் பேசினார்கள்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தற்போது நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடந்து வரும்திட்டப் பணிகள் ஆகியவை குறித்து ஜெயலலிதாவிடம் சந்திரிகா விளக்கினார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புனர்வாழ்வு உதவிகளை அளிக்க வேண்டும் என்றுசந்திரிகாவிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

அதேபோல் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு, கடத்தப்பட்டு, இலங்கை சிறைகளில்அடைக்கப்படும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சந்திரிகாவை ஜெயலலிதாவலியுறுத்தினார் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான லட்சுமண்கதிர்காமர், அந்நாட்டு எம்.பி. அஸ்ரப், லட்சுமி பிரானேஷ், தமிழக நிதித் துறை செயலாளர்நாராயணன், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை பெங்களூர் செல்லும் சந்திரிகா, பின்னர் அங்கிருந்து ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்குச்சென்று, சாய்பாபாவை சந்தித்து ஆசிபெற்ற பின் டெல்லி செல்கிறார்.

நாளை துணைப் பிரதமர் அத்வானி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாஆகியோரை சந்திரிகா சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர் நாளை மறுநாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார் சந்திரிகா.

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை, ஈராக் போர் மற்றும் இந்தியா-இலங்கை இடையிலானநல்லுறவு ஆகியவை குறித்து இந்தியத் தலைவர்களுடன் சந்திரிகா பேச்சுக்கள் நடத்தவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+