வீரப்பன் காட்டில் மின் வேலிகள்: அதிரடிப்படை தீவிரம்
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாட்டம் உள்ள சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் 50 கி.மீ.தொலைவிற்கு மின்சார வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வீரப்பன் நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதிகளில் தமிழக அதிரடிப்படையினர் தீவிர தேடுதல்வேட்டையை மேற்கொண்டுள்ளனர். வீரப்பனைப் பிடிக்க பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டுவருகின்றன.
அதில் ஒரு பகுதியாக காட்டுக்குள் மின்சார வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டு அது தற்போதுநடந்து வருகிறது.
வீரப்பனின் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் பெரும்பள்ளம் காட்டுப் பகுதியிலிருந்து சிறுமுகைகாட்டுப் பகுதி வரை சுமார் 50 கி.மீ. தொலைவிற்கு மின்சார வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இப்பகுதியில் வீரப்பன் மற்றும் அவனது கும்பல் சிக்குவார்கள் என்று அதிரடிப்படைஎதிர்பார்க்கிறது.
இதற்கிடையே வீரப்பனுக்கு எதிராக மலை கிராம மக்களின் ஆதரவைத் திரட்டும் பணியிலும்அதிரடிப் படை வீரர்கள் இறங்கியுள்ளனர். இதற்காக கிராமங்களில் மருத்துவ முகாம்கள், கலைநிகழ்ச்சிகள், திரைப்படங்களைத் திரையிடுதல் என பல்வேறு சேவைகளை அவர்கள் செய்துவருகின்றனர்.
புளியம்கோம்பை என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அதிரடிப்படையினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதை நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கூடியிருந்து பார்த்து ரசித்தனர்.
நிகழ்ச்சிக்கு இடை இடையே வீரப்பன் குறித்த தகவல்கள் தெரிந்தால் கூறுமாறு வேண்டுகோளும்விடுக்கப்பட்டது. இது தவிர, வீரப்பன் குறித்த தகவல் தந்தால் ரூ.5 கோடி பரிசு கிடைக்கும் என்றும்அது தொடர்பான கூப்பனும் கிராம மக்களிடம் தரப்பட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications