பாக்தாத் பிடிபட்டது: ஈராக்கில் அமெரிக்க ஆதரவு ஊர்வலங்கள்!
பாக்தாத்:
பாக்தாத் நகரில் ஷியா இன மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்குப் பகுதியில் அதிபர் சதாம் ஹூசேனுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் உள்ளேநுழைந்து வரும் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவான பேரணிகளும் நடக்க ஆரம்பித்துள்ளன.
இதனால், பாக்தாத் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் ஈராக்கியப் படைகளின் கட்டுப்பாடு முழுமையாக சிதைக்கப்பட்டுவிட்டதாகஅமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.
அதே நேரத்தில் சதாம் ஹூசேனின் சன்னி இனத்தினர் அதிகம் வசிக்கும் பாக்தாதின் மற்ற பகுதிகளில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரானஈராக்கியப் படைகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.
அமெரிக்கப் படைகளும் பிரிட்டிஷ் படைகளும் ஊடுருவும் இடங்களில் எல்லாம் சட்டம்-ஒழுங்கும் நாசமாகி வருகிறது. கிழக்குபாக்தாதிலும் பிரிட்டிஷ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்ரா நகரில் கடைகளை உடைத்து கொள்ளைடிக்கும் செயலில் பல கும்பல்கள்ஈடுபட்டுள்ளன.
ஹோட்டல்கள், பெரிய வீடுகள், வர்த்தக மையங்கள், வங்கிகள் ஆகியவை உடைக்கப்பட்டு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுவருகின்றன.
இந் நிலையில் வடக்கு ஈராக்கில் உள்ள மொசுல் நகரைப் பிடிக்கும் முயற்சியில் அமெரிக்க கமாண்டோ படைகளும் குர்து இனப்போராளிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே ஈராக்கிய டிவியும், ரேடியோவும் இன்று செயல்படவில்லை. பத்திரிக்கையாளர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈராக்கியராணுவத்தினரையும் காண முடியவில்லை.
இத்தனை நாட்களாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த ஈராக்கிய மூத்த அமைச்சர்களையும் இன்று பாக்தாகில் காண முடியவில்லை.
பாக்தாதின் மிக மத்தியப் பகுதியான டைகிரிஸ் சதுக்கத்துக்குள் 20 அமெரிக்க டாங்குகள் நுழைந்துள்ளன. அவர்களுக்கு தீவிர எதிர்ப்புஏதும் கிளம்பவில்லை. ஈராக்கிய ராணுவக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் இதனால் தனது படைகளை ஒருங்கிணைக்க முடியாதநிலையில் சதாம் இருப்பதாகவும் அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.
உரிய தலைமையும், உத்தரவுகளும் இல்லாததால் ரிபப்ளிகன் கார்ட் உள்ளிட்ட ஈராக்கியப் படைகள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டுபோரைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கிழக்கு பாக்தாதில் ஷியா இனத்தினர் ஈராக்கிய ராணுவத்தின் தோல்வியை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். இந்த இனத்தினர் சதாமைஎப்போதும் ஆதரித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சதாமின் படங்கள் மீது கல் எறிந்தும், செருப்புகளால் அடித்தும் இந்தப் பகுதி மக்கள் கொண்டாடி வருவதை மேற்கத்திய தொலைக்காட்சிகள்காட்டி வருகின்றன.
அதே போல வடக்கு ஈராக்கின் அர்பில் நகரிலும் அமெரிக்க ஆதரவுப் பேரணிகளை குர்து இனத்தினர் நடத்தி வருகின்றனர். இந்தப்பகுதியில் இருந்த ஈராக்கியப் படைகள் தாக்குதல்களைக் கைவிட்டு விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளன.
ஈராக்கில் சதாமுக்கு எதிராகவும் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் பேரணிகள் நடப்பது அறிந்து மிகவும் நெகிழ்ந்து போய் இருப்பதாகஅதிபர் புஷ் கூறியுள்ளார். போர் தொடங்கி 21வது நாளில் ஈராக்கை அமெரிக்கா தோற்கடித்துவிட்டதாகவே தெரிகிறது.
ஆனாலும் இது முழுமையான வெற்றி அல்ல என்று கருதப்படுகிறது. ஈராக்கிய ராணுவம் மற்றும் சதாமின் ஆதரவு போராளிக் குழுக்களும்அமெரிக்கப் படைகளை தொடர்ந்து தாக்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில் பாக்தாதில் சதாம் ஹூசேனின் ஆட்சி முடிந்துவிட்டதாக அமெரிக்கப் படைகளின் தலைமையகமான சென்ட்காமின் தலைவர்ஜெனரல் ப்ரூக்ஸ் கூறியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications