கோடை விடுமுறை: பெங்களூர்- தமிழகத்துக்கு கூடுதல் பேருந்துகள்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கோடை விடுமுறையை ஒட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க தமிழகத்தின் பல்வேறு நகர்களுக்கு பெங்களூரில் இருந்து கூடுதல் பஸ்களைஇயக்க தமிழக போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இன்று முதல் தினமும் திருநெல்வேலி, கம்பம், வேளாங்கண்ணி, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய நகர்களுக்கு பெங்களூரில் இருந்து சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வேளாங்கண்ணி பேருந்து தினமும் இரவு 7 மணிக்கும், திருச்சி, திருநெல்வேலி பேருந்துகள் இரவு 9 மணிக்கும், பாண்டிச்சேரி, கம்பம்பேருந்துகள் தினமும் இரவு 9.30 மணிக்கும் பெங்களூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் என தமிழக போக்குவரத்துக் கிளையின்பெங்களூர் கிளை மேலாளர் சிவக்குமார் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications