சதாம் எங்கே?
ஐ.நா. சபை:
நேற்று பாக்தாத் ஹோட்டல் ஒன்றின் மீது அமெரிக்க விமானம் நடத்திய கடும் குண்டுவீச்சில் இருந்து அதிபர் சதாம் ஹூசேன் தப்பிவிட்டார்என்று தெரிகிறது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
பி-1 ரக குண்டு வீச்சு விமானம் இந்த ஹோட்டலை 4 அதிக சக்தி குண்டுகளால் தாக்கியது. இதில் அந்த ஹோட்டல் சிதைந்துசின்னாபின்னாவானது. இத் தாக்குதலில் சதாம் இறந்திருக்கக் கூடும் என அமெரிக்கா கூறி வருகிறது.
ஆனால், அதை ஈராக் மறுத்துள்ளது. ஐ.நாவுக்கான ஈராக்கியத் தூதர் முகம்மத் அல்தெளரி இன்று நிருபர்களிடம் பேசுகையில், ஹோட்டல்மீது தாக்குதல் நடந்தபோது அங்கு அதிபர் சதாம் ஹூசேன் இல்லை. அவர் பத்திரமாக இருக்கிறார். விரைவில் அவர் நிருபர்கள் முன்தோன்றுவார்.
அவரது ஆட்சி தான் தொடர்ந்து கொண்டுள்ளது என்றார். இதற்கிடையே அந்த குண்டுவீச்சில் சதாம் இறந்துவிட்டார் என்பதை தங்களால்உறுதி செய்ய முடியவில்லை என பிரிட்டிஷ் படைகள் கூறியுள்ளன.
தாக்குதல் நடப்பது குறித்து கடைசி நேரத்தில் அறிந்து கொண்டு சதாம் அங்கிருந்து தப்பியிருக்கக் கூடும் என்று தெரிகிறது.
சதாம் எங்கே?:
இப்போது பாக்தாதின் பெரும்பாலான பகுதிகள் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட நிலையில் சதாம் ஹூசேன்அங்கிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது. கடந்த வாரமே அவர் தனது சொந்த ஊரான திக்ரித் நகருக்குச் சென்றவிட்டதாகவும் ஒரு தகவல்உள்ளது.
சதாம் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று அமெரிக்கப் படைகளும் கூறியுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications