அமெரிக்காவை கண்டித்து சென்னையில் காங். போராட்டம்
சென்னை:
ஈராக் மீது போர் தொடுத்துள்ள அமெரிக்கா, பிரிட்டிஷ் நாடுகளைக் கண்டித்து சென்னையில்காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மிகப் பெரும் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார்.செயல் தலைவர் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்திலிருந்து ஊர்வலமாக சென்று, அண்ணாமேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சோ. பாவுக்கும் இளங்கோவனுக்கும் இடையே வெளிப்படையாக சமீபத்தில் மோதல் வெடித்தது.அதன் பிறகு இருவரையும் காங்கிரஸ் மேலிடம் அழைத்து டோஸ் கொடுத்தது.
அதன் பின்னர் இருவரும் இணைந்து கலந்து கொள்ளும் முதல் போராட்ட நிகழ்ச்சி இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
என்னதான் இவர்கள் இணைவரும் இணைந்து நின்று போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தாலும்,இருவருடைய ஆதரவாளர்களும் கோஷ்டி கோஷ்டியாகப் பிரிந்து தனித்தனியாகப் போட்டிபோட்டுக் கொண்டு சென்னை நகர் முழுவதும் இந்தப் போராட்டம் தொடர்பான போஸ்டர்களைஅடித்து ஒட்டியுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications