சதாமுக்கு உதவும் சிரியா

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாதை அமெரிக்கப் படையினர் பிடித்துள்ளதைத் தொடர்ந்து அங்குள்ள ஒருமசூதிக்குள் அதிபர் சதாம் ஹூசேன் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தமசூதியை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து வருகின்றன.

ஆனால், ஈராக்கிய ரிபப்ளிகன் கார்ட் படைகள் கடும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஒருஅமெரிக்க வீரர் கொல்லப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சதாம் குடும்பத்தினரை ஈராக்கில் இருந்து பத்திரமாக வெளியேற்றும் முயற்சிகளில்சிரியா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

பாக்தாத் நகரின் பெரும்பாலான பகுதிகளை அமெரிக்கப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.பாக்தாதின் முக்கியத் தெருக்களில் அமெரிக்காவின் டாங்குகள் வலம் வந்து கொண்டுள்ளன.

பாக்தாத் சாலைகளில் ஈராக் மக்கள் குறிப்பாக ஷியா இனத்தினர், அமெரிக்கப் படையினரைவரவேற்று ஊர்வலங்கள் நடத்தினர். நேற்று மாலை பாக்தாதின் மையப் பகுதியில்வைக்கப்பட்டிருந்த சதாமின் பிரம்மாண்டமான சிலை ஒன்று இடித்துத் தள்ளப்பட்டது.

அந்தச் சிலையின் தலைப் பகுதியைத் தனியாகத் துண்டித்து சங்கிலியால் அதைக் கட்டி சில ஈராக்மக்கள் இழுத்துச் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் பாக்தாதின் பல பகுதிகளில் ஈராக்கிய ரிபப்ளிகன் கார்ட்படையினருக்கும் அமெரிக்கப் படையினருக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.

இதற்கிடையே டைகிரிஸ் நதியின் அருகே உள்ள அதிபர் சதாமின் மாளிகையையொட்டியுள்ள ஒருமசூதிக்குள் அவர் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசூதியைச் சுற்றி கடும் சண்டை நடந்துவருகிறது. இன்று அதிகாலை 4 முதல் இந்தச் சண்டை நடந்து வருகிறது.

டாங்குகள் குண்டு வீசும் சத்தமும், கிரனைட்கள் வெடிக்கும் சத்தமும் கேட்டவண்ணம் உள்ளது.

ரஷ்யா மறுப்பு:

முன்னதாக சதாம் ஹூசேன் ரஷ்யத் தூதரக கட்டடத்துக்குள் இருப்பதாகவும் அவரை ரஷ்யா பாதுகாத்துவருவதாகவும் புரளிகள் கிளம்பின. ஆனால், தங்களது கட்டடத்துக்குள் சதாம் ஹூசேன் இல்லை என ரஷ்யாமறுத்துள்ளது. இந் நிலையில் இப்போது புதிய புரளி கிளம்பியுள்ளது.

சதாம் பாக்தாதில் இல்லை என்றும் அவர் சிரியா உதவியுடன் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அமெரிக்கா கூறுகிறது.இப்போதைய நிலைப்படி சதாம் எங்கிருக்கிறார் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.

சதாம் தப்ப முடியாது..:

அமைதியான வழியில் ஆட்சியைவிட்டு விலகி வேறு நாட்டில் தஞ்சம் புகுவதற்கான வாய்ப்பை சதாம் ஹூசேன்இழந்துவிட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடரபாளர் ஆர் பிஷ்ஷர் கூறியுள்ளார்.

அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. இருந்தால் நிச்சயம்பிடிபடுவார் அல்லது கொல்லப்படுவார் என்றார்.

ஈராக்கிய ரேடியோ செயல்படுகிறது:

இந் நிலையில் ஈராக்கிய ரேடியோ தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அது தொடர்ந்து அதிபர் சதாமுக்குஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+