திக்ரித் நகரில் சதாம்?: கடும் சண்டை காத்திருக்கிறது

Subscribe to Oneindia Tamil

திக்ரித்:

அதிபர் சதாம் ஹூசேனின் சொந்த ஊரான திக்ரித்தில் ஆயிரக்கணக்கான ரிபப்ளிகன் கார்ட் படைகள்குவிந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த நகரில் தான் சதாம் மறைந்திருக்க வேண்டும் என்று கூறும் அமெரிக்கப் படைகள் அடுத்ததாக இந்த நகரைப்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால், சதாமைப் பாதுகாக்கும்பொறுட்டு போர் நடந்துகொண்டிருந்தபோதே ஆயிரக்கணக்கான ரிபப்ளிகன் படைகள் திக்ரித் நகரில் குவிக்கப்பட்டுவிட்டதாகத்தெரிகிறது.

இந்த நகரைப் பிடிக்க கடும் சண்டை நடத்த வேண்டி இருக்கும் என அமெரிக்கப் படைகள் கூறுகின்றன.

ரஷ்யா, இந்தியா கண்டனம்:

ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிக் கொண்டு அந் நாட்டை அமெரிக்கா தாக்கியது. ஆனால்,இதுவரை அப்படிப்பட்ட ஆயுதம் ஏதும் இருந்ததற்கான ஆதரமே சிக்கவில்லை.

இதனால் பொய்க் காரணமா கூறி ஈராக்கை அமெரிக்கா தாக்கியது மிகப் பெரிய குற்றமாகும் என ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

அதே போல இந்தியாவும் அமெரிக்காவைக் குறை கூறியுள்ளது. பேரழிவு ஆயுதம் வைத்திருப்பதாக ஈராக் மீதுஅமெரிக்கா சாட்டிய குற்றச்சாட்டு பொய் என்பது அம்பலமாகிவிட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறினார்.

ஈராக்கின் அடுத்த ஆட்சி குறித்து விவாதிக்க ஜெர்மன் அதிபர் ஸ்ரேடர், பிரான்ஸ் அதிபர் சிராக் ஆகியோர் நேற்றுரஷ்யாவின் செயின்ட் பீட்டஸ்பர்க் நகருக்கு வந்தனர். அங்கு அவர்களுடன் விளாடிமிர் புடின் ஆலோசனைநடத்தினார்.

அடுத்த ஆட்சியை ஐ.நாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் தான் அமைக்க வேண்டும், தனிப்பட்ட முறையில்அமெரிக்கா அங்கு தனது பொம்மை ஆட்சியை நிறுவக் கூடாது என்று மூன்று நாடுகளும் கூறியுள்ளன.

சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை:

இதற்கிடையே ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் மற்றும் அவரது அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள், மகன்கள் என47 பேரை தேடப்படுவோர் பட்டியலில் சி.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு எந்த நாடும் அடைக்கலம் தரக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறுகையில், சதாமும் அவரது கூட்டாளிகளும் சிரியாவில் அடைக்கலம் புகமுயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு சிரியா எந்த வகையிலும் உதவக் கூடாது என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+