புத்தாண்டு கூட்டத்தை பயன்படுத்தி ரூ.10 லட்சம் வைர மோதிரங்கள் "அபேஸ்"
சென்னை:
புத்தாண்டு கூட்டத்தைப் பயன்படுத்தி சென்னையில் உள்ள ஒரு நகைக் கடையில் ரூ.10 லட்சம்மதிப்புள்ள வைர மோதிரங்களைத் திருடிச் சென்ற 3 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை-தி. நகரில் உள்ள உஸ்மான் சாலையில் மக்கள்கூட்டம் அலை மோதியது.
அப்பகுதியில் உள்ள பிரபல நகைக் கடையிலும் வழக்கம் போல் கூட்டம் நிரம்பி இருந்தது.
அப்போது அந்தக் கடைக்கு வந்த மூன்று பேர் நகைகளைப் பார்வையிடுவது போல் நடித்தனர். சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் அந்நபர்களைக் காணவில்லை. அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த 2 வைரமோதிரங்களையும் காணவில்லை.
அந்த மூன்று பேரும்தான் வைர மோதிரங்களைத் திருடிச் சென்றிருப்பார்கள் என்று தெரிகிறது.திருடு போன அந்த வைர மோதிரங்களின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி திருடர்களைத் தேடி வருகின்றனர்.
வழக்கமாக அந்தக் கடையில் கண்காணிப்புக் காமிராக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் புதியகாமிராக்களை மாட்டுவதற்காக நேற்று பழைய காமிராக்களை கடைக்காரர்கள் கழற்றிவைத்திருந்தனர். அதைத் தெரிந்து கொண்டவர்கள்தான் இந்தத் திருட்டை நடத்தியிருக்க வேண்டும்என்றும் கருதப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications