அரசுப் பள்ளிகளில் இனி 1ம் வகுப்பிலிருந்தே ஆங்கிலப் பாடம்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பிலேயே ஆங்கிலப்பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற இடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

நர்சரிப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது பெற்றோர்களின் வழக்கமாகி விட்டது.பிள்ளைகளின் கல்வித் தரம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக இப்படி சேர்ப்பதை வழக்கமாகிக்கொண்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் இந்தத் தரம் இல்லை என்று பெற்றோர்கள் நினைப்பதே இதற்குக் காரணம். இதைஇப்படியே தொடர அனுமதித்தால் அரசுப் பள்ளிகளில் யாரும் படிக்க வராத நிலை ஏற்பட்டு விடும்.

எனவே அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பிலேயே ஆங்கிலப் பாடம்அறிமுகப்படுத்தப்படும்.

முதல்வர் ஜெயலலிதா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றார் ராதாகிருஷ்ணன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+