For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் அலிக்கு "மிஸ்.கூவாகம் 2003" பட்டம்

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

விழுப்புரத்தில் நடந்த அலிகளுக்கான அழகிப் போட்டியில் "மிஸ் கூவாகம் 2003ஆக ரஞ்சிதாஎன்ற அலி தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்சித்திரை மாதம் அலிகள் என்ற அரவாணிகள் கூடி விழா எடுப்பது வழக்கம்.

இவ்விழாவில் நாடெங்கிலும் இருந்து வரும் நூற்றுக்கணக்கான அலிகள் கலந்து கொள்வார்கள்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலிகளுக்குத் தாலி கட்டிப் பிரிக்கும் நிகழ்ச்சி இன்றுநடைபெறுகிறது.

இதற்கிடையே விழாவின் ஒரு பகுதியாக அலிகளுக்கான அழகிப் போட்டி நடத்தப்படுவதுவழக்கம். அலிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டவும், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்இதுபோன்ற அழகிப் போட்டிகளும் பிற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

அதன்படி இந்த ஆண்டு அலிகளுக்கான அழகிப் போட்டி நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.இதில் ஏராளமான அலிகள் கலந்து கொண்டனர். ஜெர்மனி தூதரக அதிகாரி கார்ஸ்டென், சிவகாமி,ஐஸ்வர்யா ராஜலட்சுமி, அஸ்மாமேனன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

முதல் சுற்றுப் போட்டியில் 51 பேர் கலந்து கொண்டனர். அனைவரும் பெண்களையே தோற்கடிக்கும்விதத்தில் விதம் விதமான அலங்காரங்களுடன் அணிவகுத்து வந்து அசத்தினர்.

இவர்களில் 12 பேர் இரண்டாவது சுற்றுக்குத் தேறினர். பின்னர் இறுதிச் சுற்றுக்கு 6 பேர்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த ஆறு பேரில் பெங்களூரைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற அலி, "மிஸ் கூவாகம் 2003"ஆகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இதே பெங்களூரைச் சேர்ந்த பமிலா என்பவர் 2ஆம் இடத்தைப் பெற்றார். ஈரோட்டைச் சேர்ந்தமதுமிதாவுக்கு 3ஆம் இடம் கிடைத்தது. இந்த மூன்று பேருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டு,பரிசுகளும் வழங்கப்பட்டன.

அலிகளுக்கான இந்த அழகிப் போட்டியை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். சில அலிகள்அட்டகாசமான அழகுடன் மேடையில் பவனி வந்ததைக் கண்டு மக்கள் அதிசயித்தனர்.

முன்னதாக அலிகள் குறித்த சி.டி. ஒன்றை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முகம்மது அஸ்லம்வெளியிட்டார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X