புலிகள் மீதான தடை நீக்கம்: அமெரிக்கா நிபந்தனை
வாஷிங்டன்:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைமுயற்சிகளை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இலங்கை அமைதிப் பேச்சுக்கள் தொடர்பான ஒரு மாநாடு நேற்று வாஷிங்டனில் நடைபெற்றது.அமெரிக்கா நடத்திய இந்த மாநாட்டில் இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் இந்தியா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே உள்ளிட்ட வேறு பல நாடுகளையும்இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடத்த அமெரிக்கா, புலிகளுக்கு மட்டும்அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்காவில் புலிகள் மீதான தடை இன்னும் அமலில் உள்ளதேஇதற்குக் காரணம்.
வாஷிங்டன் மாநாட்டிற்குத் தங்களை அழைக்காததைப் புலிகள் கடுமையாகக் கண்டித்திருந்தனர்.இதன் எதிரொலியாக வரும் ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் மாநாட்டில்கலந்து கொள்வது குறித்து யோசிப்போம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவின் சார்பில்அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் லலித் மான்சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,
இலங்கையின் ஒருமைப்பாட்டில் இந்தியா மிகவும் நம்பிக்கை வைத்துள்ளது. தற்போது நடந்துவரும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பக் கட்டத்திலிருந்தே இந்தியா ஆதரித்துவந்துள்ளது.
கடந்த வாரம் இந்தியா சென்ற இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அமைதிப்பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியத் தலைவர்களிடம் விலக்கினார்.
அதேபோல் கடந்த மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடந்த மாதம் இந்தியத்தலைவர்களிடம் அமைதிப் பேச்சுக்கள் தொடர்பாக விவாதித்தார்.
தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ரிச்சர்டு ஆர்மிடேஜ் அழைப்பின்பேரில் இந்தியா இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தற்போது நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தையும் இந்த மாநாடும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இலங்கையின் சுகாதார, கல்வித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இந்தியா 200மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி அளிக்கப் போவதை இந்நேரத்தில் நினைவுபடுத்தவிரும்புகிறேன் என்றார் மான்சிங்.
அமெரிக்கா நிபந்தனை:
இதற்கிடையே இலங்கையில் முழு அமைதி திரும்ப அனைத்து நாடுகளின் உதவியையும்கோரியுள்ளது அமெரிக்கா. வாஷிங்டன் மாநாட்டில் பேசிய ஆர்மிடேஜ் இதைத் தெரிவித்தார்.அவர் மேலும் பேசுகையில்,
இலங்கை அமைதிப் பேச்சுக்கள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. ஆறு சுற்றுபேச்சுவார்த்தைகளில் புலிகளும், இலங்கை அரசும் முக்கியமான பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு உலக நாடுகள் தங்களுடைய முழு ஆதரவையும்,உதவிகளையும் அளிக்க வேண்டும்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்காததால் புலிகள் எங்கள் மீது மிகவும் கோபமாகஇருப்பார்கள். கடந்த 1997ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் புலிகள்இயக்கத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இது புலிகளுக்கும் தெரியும். தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள்அமெரிக்காவில் நுழைய முடியாது. அவர்களுக்கான விசாவை இந்நிலையில் அமெரிக்காவால்அளிக்கவும் இயலாது.
இதனால்தான் இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் புலிகளை அழைக்கவில்லை. புலிகள்மீதான தடையை நாங்கள் நீக்க வேண்டும் என்றால் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்துமுழுமையாக விலகி வர வேண்டும்.
போரைக் கைவிட்டு அமைதிப் பாதைக்கு புலிகள் திரும்பி இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதத்தைமுழுவதுமாகக் கைவிட வேண்டும். அப்போதுதான் புலிகள் மீதான தடையை நாங்கள் நீக்க முடியும்.
அமைதிப் பேச்சுக்கள் முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், புலிகளும் இலங்கைஅரசும் இன்னும் பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது என்றார் ஆர்மிடேஜ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications