மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரை:
மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கானபக்தர்கள் நேரிலும், லட்சக்கணக்கானவர்கள் தொலைக்காட்சி மூலமும் இந்த வைபவத்தைக் கண்டுமகிழ்ந்தனர்.
மதுரையில் தற்போது சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றானமீனாட்சி திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
ஆடி வீதியில் அமைந்துள்ள திருக்கல்யாண மேடையில் அம்மன் சிலையும், சொக்கர் சிலையும்அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. மீனாட்சி அம்மன் அரக்கு நிற பட்டுச் சேலை அணிந்து,தங்கக் கிரீடம் சூடியிருந்தாள். வெண் பட்டு உடுத்தி, தங்கக் கிரீடம் பூண்டிருந்தார் சொக்கர்.
பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் சரியாக நேற்று காலை 10.02 மணிக்கு அம்மனுக்குமங்கள தாலி அணிவிக்கப்பட்டது.
திருமணத்தைக் காண அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களுடைய பழைய தாலிக்கயிறுகளைக் கழற்றி விட்டு, புதிய மஞ்சள் கயிறுகளை அணிந்து கொண்டனர். இதற்கான புதியமஞ்சள் கயிறுகளை ஏராளமான பக்தர்கள் ஆங்காங்கே நின்று இலவசமாகவே விநியோகம்செய்தனர்.
திருக்கல்யாணத்தையொட்டி மதுரை நகரமே விழாக் கோலம் பூண்டது. மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இரவு பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், யானை வாகனத்தில் சொக்கரும் மாசிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
மதுரைக்கு கிளம்பினார் கள்ளழகர்:
இதற்கிடையே அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் கோலம் பூண்டு சுந்தரராஜப் பெருமாள்எனப்படும் அழகர் மதுரை நோக்கிக் கிளம்பி விட்டார்.
மீனாட்சித் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் மற்றொரு முக்கியநிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.
தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அவர் மதுரை வந்ததாகவும், வருவதற்குள்திருமணம் நடந்து முடிந்து விட்டதால் கோபித்துக் கொண்டு அவர் நகருக்குள் வராமல்ஆற்றங்கரையோரமாகவே சென்று அழகர் மலையைச் சென்று அடைவதாகவும் புராணம் கூறுகிறது.
இந்நிலையில் அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் ஏறி கள்ளழகர்வேடம் பூண்டு மதுரை நோக்கிக் கிளம்பினார்.
மதுரைக்குள் அழகர் நுழையும்போது தல்லாகுளம் பகுதியில அவரை பக்தர்கள் எதிர்கொண்டுவரவேற்பார்கள். "எதிர்சேவை" எனப்படும் இந்நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. மதுரைக்குவரும் வழியில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப் படிகளில் அழகருக்கு வரவேற்புஅளிக்கப்படும்.
முன்னதாக இன்று காலை தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. காலை சுமார் 7.30 மணிக்குக்கிளம்பிய தேர் காலை சுமார் 10.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
-->












Click it and Unblock the Notifications