சாமியாரின் ஜீவ சமாதியை தடுத்து நிறுத்திய போலீசார்
கரூர்:
கரூர் அருகே ஜீவ சமாதி அடையப் போவதாகக் கூறி குழிக்குள் இறங்க முயற்சித்த ஒரு சாமியாரைப்போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கரூர் அருகே உள்ள தான்தோன்றி மலைப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக ஆசிரமம்வைத்துள்ளார் பாலுச்சாமி என்ற சாமியார். இவருக்கென்று சில சீடர்களும் உள்ளனர்.
இந்நிலையில் ஆசிரம வளாகத்திற்குள் தான் ஜீவ சமாதி அடையப் போவதாக பாலுச்சாமி தன்சீடர்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆசிரம வளாகத்திலேயே அவருக்குக் குழிதோண்டப்பட்டு மற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதற்கிடையே இவ்விஷயம் போலீசாருக்குத் தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் விரைந்துவந்து, இந்தச் செயல் சட்ட விரோதமானது என்று பாலுச்சாமியிடம் எடுத்துக் கூறினர்.
ஆனால் பாலுச்சாமி அதைக் கண்டுகொள்ளவில்லை. மளமளவென்று தோண்டப்பட்டிருந்தகுழிக்குள் மளமளவென்று இறங்கி விட்டார். அவருடைய சீடர்களும் அவரைக் குழிக்குள்இறக்கிவிட்டு, மேலே சிமெண்ட் வைத்துப் பூசுவதற்குத் தயாராக இருந்தனர்.
அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கொலை வழக்கு தொடரப்படும் என்று அந்தச் சீடர்களைமிரட்டிய போலீசார், பின்னர் ஒரு வழியாக சாமியாரை வலுக்கட்டாயமாக அப்பகுதியிலிருந்துஅப்புறப்படுத்தினர். சிறிது நேரம் போலீசாருடன் வாக்குவாதம் செய்த சீடர்களும் பின்னர் சென்றுவிட்டனர்.
இப்போது என்னைத் தடுத்து விட்டாலும் விரைவில் நான் ஜீவ சமாதி அடையப் போவது நிச்சயம்என்று பாலுச்சாமி கூறியுள்ளார். இதையடுத்து அவரைப் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்துவருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications