அயனாவரம் குமாரும் "அற்புத விளக்கும்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அலாவுதீனின் அற்புத விளக்கைப் போன்ற சக்தி கொண்ட ஒரு விளக்கு தன்னிடம் உள்ளதாகக் கூறிபொதுமக்களிடம் இருந்து ரூ.15 லட்சம் வரை சுருட்டிய குமார் என்ற நபரும் அவருடைய காதலியும்போலீசாரிடம் சிக்கினர்.

எப்படித்தான் ஏமாறுவது என்ற எல்லையே இல்லாமல் நம் மக்கள் "குண்டக்க மண்டக்க" ஏமாந்துகொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றும் கும்பல்களுக்கும்கவலையே இல்லை.

சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் இப்படித்தான் குமாரிடம் ரூ.15 லட்சம் வரைபணத்தை இழந்துள்ளனர் பொதுமக்கள், குறிப்பாக பெண்மணிகள்.

அயனாவரத்தைச் சேர்ந்த குமார் பல தொழில்களைச் செய்து வந்தார் (இனி கம்பி எண்ணும் தொழில்மட்டுமே). இருந்தாலும் அவருக்கு வருமானம் போதவில்லை என்பதால் குறுக்கு வழியில் பணம்"சம்பாதிக்க" முடிவு செய்தார். அவருடைய காதலி சரோஜாவும் அவருக்குக் கை கொடுத்தார்.

இருவரும் சேர்ந்து திட்டமிட்டு திருமுல்லைவாயிலுக்கு வந்தனர். அங்குள்ள பல பெண்களிடம்"என்னிடம் ஒரு அற்புதமான விளக்கு உள்ளது. அலாவுதீனின் அற்புத விளக்கு போல் இதுவும்அற்புதமான சக்தி கொண்டது. அந்த விளக்கை அமெரிக்காவில் உள்ள ஒரு கோடீஸ்வரரிடம்ரூ.270 கோடிக்கு விற்று விட்டேன்" என்று கூறிய குமார் அதற்கான "செக்" ஒன்றையும் அந்தப்பெண்களிடம் காட்டியுள்ளார்.

தொடர்ந்து, "இந்தப் பணத்தை வங்கியிலிருந்து நான் எடுத்தால் "சூப்பர் டேக்ஸ்" கட்ட வேண்டிவரும். இதற்கான தொகையை நீங்கள் கொடுத்தால் பணத்தை மாற்றிய பின்னர் உங்களுக்கு நீங்கள்கொடுத்ததைப் போல் 10 மடங்கு பணத்தை நான் கொடுப்பேன்" என்றும் கூறியுள்ளார் குமார்.

பணத்தாசை நம் பெண்களை விட்டுவிடுமா என்ன? நகை, நட்டுக்களை விற்றும் கடன் வாங்கியும்ரூ.15 லட்சம் வரை வசூல் செய்து அதை அவர்கள் குமாரிடம் கொடுத்துள்ளனர்.

ஒரே சமயத்தில் இவ்வளவு பணத்தையும் பார்த்து வியந்துபோன குமார், தன்னுடைய விளக்குதற்போது ரூ.68,000 கோடிக்கு விலைக்கு வந்திருப்பதாகக் கூறி கதை விட்டார். அதன் மூலம் மேலும்பணம் கறக்கலாம் என்று அவர் திட்டம் போட்டிருந்தார்.

அதன் பின்னர்தான் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த சிலருக்குப் பொறி தட்டியுள்ளது. குமாரைநெருக்கி விசாரித்தபோதுதான் அவர் "புருடா" விட்ட விவரம் தெரிய வந்தது. இதையடுத்து குமார்தன் காதலியுடன் தலைமறைவானார்.

இதையடுத்து போலீசாரிடம் 7 பெண்கள் சென்று இது தொடர்பாகப் புகார் கொடுத்தனர். போலீசார்வலைவீசித் தேடியதில் குமாரும் சரோஜாவும் பிடிபட்டனர்.

அவர்களைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+