கம்ப்யூட்டர்களை திருடி குப்பை வண்டியில் "அள்ளிச்" சென்ற திருடர்கள்
சென்னை:
திருடிய கம்ப்யூட்டர்களை நகராட்சி குப்பை வண்டியில் அள்ளிப் போட்டுக்கொண்டு சென்ற 2 பேரை சென்னை அருகே போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை அருகே அம்பத்தூரை ஒட்டியுள்ளது வரதராஜபுரம். இப் பகுதியில் போலீஸார் வழக்கமான இரவு ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அம்பத்தூர் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டியை 2 பேர் தள்ளிக் கொண்டு வந்தனர்.
இந்த நேரத்தில் நகராட்சி ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் என்று சந்தேகப்பட்ட போலீஸார் வண்டியை நெருங்கினர். அப்போது குப்பைவண்டியில் 4 கம்ப்யூட்டர்கள் இருந்தன. குப்பை வண்டியில் கம்ப்யூட்டரா என்று போலீஸார் அதிர்ந்தபோது, 2 பேரில் ஒருவன்தப்பியோடினான்.
மற்றவனை போலீஸார் சுதாரித்து பிடித்துக் கொண்டனர். அவனிடம் விசாரித்தபோது இருவரும் நகராட்சி ஊழியர்கள் இல்லை என்றுதெரியவந்தது. இருவரும் முதலில் குப்பை வண்டியைத் திருடியுள்ளனர்.
பின்னர் சுரேஷ் குமார் என்பவரது அலுவலகத்தில் இருந்த 4 கம்ப்யூட்டர்களைத் திருடினர். அதை குப்பை வண்டியில் போட்டுக் கொண்டுஹாயாக கிளம்பியுள்ளனர். வழியில் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டனர்.
போலீஸில் சிக்கியவன் பெயர் பாக்யராஜ். தப்பியவன் பெயர் சேகர். அவனையும் போலீஸார் பின்னர் பிடித்துவிட்டனர். கம்ப்யூட்டர்திருடிய இருவரும் இப்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications