மினி லாரி மரத்தில் மோதி விபத்து: கோவை காய்கறி வியாபாரி, 2 பேர் உடல் நசுங்கி சாவு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே ஒரு மினி லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கோயம்புத்தூரைச்சேர்ந்த காய்கறி வியாபாரி உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர் சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற காய்கறி வியாபாரி, தர்மபுரிமாவட்டம் சூளகிரியில் காலிபிளவர் வாங்கி வர ஆனந்தன் முடிவு செய்தார்.
இதையடுத்து 3 கூலித் தொழிலாளர்களுடன் அவர் ஒரு லாரியில் கிளம்பினார்.கோயம்புத்தூர்-கே.கே. நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற டிரைவர் லாரியை ஓட்டிச் சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி அருகே நாட்டான்கொட்டாய் என்றஇடத்தில் இந்த லாரி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காகலாரியை இடதுபுறமாகத் திருப்பினார் ராஜேந்திரன்.
அப்போது லாரி நிலை தடுமாறி சாலையை விட்டு கீழே இறங்கியது. பின்னர் அருகில் இருந்த புளியமரத்தின் மீது அது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் நொறுங்கியது.
இதில் 2 கூலித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை. விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தன், ராஜேந்திரன்மற்றும் மற்றொரு கூலித் தொழிலாளியான காந்துருவன் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆனந்தன் இறந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில்தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்கமாக அந்த மினி லாரியை ஆனந்தனின் தம்பிதான் ஓட்டுவது வழக்கமாம். ஆனால் அவர்திடீரென வெளியூர் சென்று விட்டதால் ராஜேந்திரன் லாரியை ஓட்டியதாகத் தெரிகிறது.அப்போதுதான் அது விபத்தில் சிக்கியுள்ளது.
இவ்விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications